அதிக வீரியம் மிக்க ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸால் ஹாங்காங்கில் நான்காவது கோவிட் அலை அச்சங்கள் அதிகரித்துள்ளன
  
2021 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான், மிகவும் தீவிரமான கோவிட் மாறுபாடு இப்போது உலகளவில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவின் பிறழ்வாக மாறியுள்ளது, 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது இந்தியாவில் COVID-19 இன் கொடூரமான இரண்டாவது அலையைத் தூண்டிய டெல்டா மாறுபாட்டை விஞ்சியுள்ளது. இந்த மாறுபாட்டின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கையை எதிர்கொள்ளும் சமீபத்திய நகரமாக ஹாங்காங் உள்ளது.


உத்தியோகபூர்வ தரவுகளின்படி, ஹாங்காங்கில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். 4,600 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.


மேலும் படிக்க | சீனாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா: பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு


அவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போடப்படாத வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகளின் இந்த திடீர் அதிகரிப்பு, நகரத்தில் உள்ள சவக்கிடங்கள் நிரம்பி வழியும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது.
எனவே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கப்பல் கொள்கலன்களுக்கு மாற்றும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொரோனா பாதிப்பின் இந்த திடீர் அதிகரிப்பினால் சுமார் 7.4 மில்லியன் ஹாங்காங் வாசிகள், தங்கள் எதிர்காலம் மற்றும் வரவிருக்கும் நாட்களில் அவர்கள் என்ன எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர். 


நகரத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் திடீரென தீர்ந்துவிட்டது. மக்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை மட்டுமே நிச்சயமானது போல் தெரிகிறது.



ஹாங்காங்கில் அதிகரித்திருக்கும் இந்த திடீர் கொரோனா பரவல், முக்கியமாக கோவிட்-19 இன் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஓமிக்ரான் மாறுபாட்டால் ஏற்பட்டிருக்கிறது, இது உலகளவில் டெல்டா மாறுபாட்டை மாற்றியமைத்து ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக மாறியுள்ளது.


மேலும் படிக்க | சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா தொற்று உயர்வு


ஓமிக்ரான் அதன் ஸ்பைக் புரதத்தில் 32 க்கும் மேற்பட்ட கவலைக்குரிய பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, இது ஒரு ஆபத்தான விகாரத்தை உருவாக்குகிறது, இது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களையும் பாதிக்கலாம். 


கடந்த சில ஆண்டுகளாக, சீனா 'ஜீரோ-கோவிட்' உத்தியை பின்பற்றி வருகிறது, இருப்பினும், அதிகாரிகள் எதிர்பார்த்தது போல் அது செயல்படவில்லை என்பதை தற்போதைய சூழ்நிலை காட்டுகிறது.


ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் சர்வதேசங்களையும் பாடாய்படுத்டிய பிறகு, கொஞ்சம் ஆசுவாசமடைந்த மக்களுக்கு பேரிடியாக வந்து இறங்கும் செய்தியாக ஒமிக்ரான் மாறிவிட்டது. 


மேலும் படிக்க | இன்று முதல் 12-14 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி


அதிகம் பரவக்கூடிய ஓமிக்ரான் வைரஸால் ஏற்படும் தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்று ஹாங்காங் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 


நிபுணர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாலர் குழுக்களை சீனா அனுப்பியுள்ளது. இது, ஹாங்காங்கில் லாக்டவுன் விதிக்கப்படலாம் என்று ஊகிக்கச் செய்கிறது.  


பரந்த அளவிலான கொரோனா பரிசோதனை மற்றும் லாக்டவுன் அமல்படுத்தப்படும் சாத்தியங்கள் தென்படுவதால், ஹாங்காங் மக்கள், தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைத்துள்ளனர்.


டிரக் ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து இறைச்சி மற்றும் காய்கறிகளின் ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்படுத்தியது, எனவே, பற்றாக்குறை மற்றும் கடல் வழியாக விநியோகம் பற்றிய கவலைகளும் அதிகரித்துள்ளன.


மேலும் படிக்க | கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR