தக்காளி பொதுவாக சமையலுக்கு பயன்படும் ஒரு உணவு பொருள் என்று தான் நமக்கு தெரியும். ஆனால் முகத்தில் படியும் அழுக்கை, சூரிய ஒளியினால் ஏற்பாடு கருமையை நிக்கவும் பொலிவுடன் இருக்க உதவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் முக்கிய குறிப்புகள் : 


# பழுத்த தக்காளியில் உள்ள கொட்டை நீக்கி பசைப்போல அரைத்து கொள்ள வேண்டும். பின்பு, முகத்தில் அப்ளை செய்து 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால்  சருமத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் கருமை நிறம் மறைய உதவுகிறது.


# 1 ஸ்பூன் தக்காளிச் சாறுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர சருமத்தின் நிறம் மாறுவதை கண் எதிரே  பார்க்கலாம்.  


# நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து  முகம், கை, காலில் தினமும் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும், மற்றும்பொலிவு பெறும். 


# தக்காளி ஜூஸ் குடித்தால் உடல் ஆரோக்கியம் பெறும் மற்றும் உடல் , முகம் பொலிவு பெறும்.  


வைட்டமின் A,B,C, காலோரிகள், இரும்புச்சத்து, நிறைந்து தக்காளி புற்றுநோய் தடுக்கும் சிறந்த மருத்துவ குணம் நிறைந்து தக்காளி .