வேர்க்கடலை பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இதை சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்வதற்கான காரணம் இது சீசனில் விளையும் பயிர் என்பது மட்டுமல்ல.


வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் உடலை வைத்திருக்கும்.மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலைக்குதான்  புரதச் சத்து அதிகம்.


சக்தி, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது. பொதுவாக, குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும்.


மேலும், வேர்க்கடலை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் நீண்ட நாள் வாழலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பைத் தரக்கூடும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைவு.


வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீர் படுத்தக்கூடியது. சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21% வரை குறையும் என்று தெரியவந்துள்ளது.


ஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது. அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.


வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப் பதத்தைப் பாதுகாக்கும். இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதைத் தடுக்கலாம். மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும்.


ஆகையால் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெறலாம். வேர்க்கடலையை ஆனால், அதிகம் சாப்பிடுவதும் செரிமானக் கோளாறை ஏற்படுத்தி வயிற்று வலி ற்படச் செய்யும்.