Premature Aging: என்றும் மார்கண்டேயனாக இருக்க கவனத்தில் கொள்ள வேண்டியவை
தற்போதைய வாழ்க்கை முறையில், இளமையிலேயே முதுமை தோற்றம் வந்து விடுகிறது.
பொதுவாக எல்லோரும் எப்போதும் இளமையாக தோற்றம் அளிக்கவே விரும்புவார்கள். ஆனால், தற்போதைய வாழ்க்கை முறையில், இளமையிலேயே முதுமை தோற்றம் வந்து விடுகிறது. அதோடு சில கெட்ட பழக்கங்களும் சேர்ந்து கொண்டால், முதுமை தோற்றம் என்பது மிக விரைவில் வந்துவிடுகிறது என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சில கெட்ட பழக்கங்கள் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், முதுமையான தோற்றத்திற்கும் முக்கிய காரணம் ஆகி விடுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இளம் வயதிலேயே வயதானவராகத் தோன்ற ஆரம்பிக்கிறீர்கள்.
மேலும் படிக்க | Bone Health: எலும்புகளை பலவீனமாக்கும் ஆபத்தான பழக்கங்கள்
இளமையில் முதுமை தோற்றத்தை கொண்டு வரும் இந்த 5 கெட்ட பழக்கங்கள்
1. பதற்றம்
எதற்கும் அதிகமாகக் கவலைப்படுவது மனிதர்களை விரைவில் முதுமை அடையச் செய்யும். அவர்கள் சில மன அல்லது உடல் நோய்களுக்கும் பலியாகி இருக்கலாம். பதற்றம் மிகவும் கொடியது, அது ஒரு சைலண்ட் கில்லர் எனலாம். எனவே, நீங்கள் நீண்ட காலம் இளமையாக இருக்க விரும்பினால், அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன
2. குறைவான தூக்கம்
தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்காமல் இருப்பதும் ஒரு பெரிய பிரச்சனையாகும். இதற்கும் மன அழுத்தத்திற்கும் ஆழமான தொடர்பு உண்டு. நல்ல ஆழ்ந்த தூக்கம், இளமையாக இருக்கவும், மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும் உதவுகிறது. ஆனால் சிலர் அஅதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த பிரச்சனை இளைஞர்களிடையே மிக வேகமாக அதிகரித்து வருகிறது, இதன் பக்க விளைவுகளை எதிர்காலத்தில் காணலாம்.
3. உடல் செயலற்ற தன்மை
உடல் சுறுசுறுப்பு இல்லாததால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஏனெனில் தினசரி வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது அல்லது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்காமல் இருப்பது நமது ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நோய்கள் விரைவாக உடலைச் சூழ்ந்து, முதுமையை நோக்கி வேகமாக செல்லும் நிலை உண்டாகிறது.
4. மோசமான உணவு பழக்கம்
இளமையிலேயே முதுமை தோற்றம் வருவதற்கு, துரித உணவும், மோசமான உணவு பழக்கம் மிக முக்கிய காரணமாகும். 21 ஆம் நூற்றாண்டில், சோடா, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவை நமது உணவில் தவிர்க்க முடியாத பகுதியாக மாறிவிட்டன. மேலும் அவை நமது ஆயுட்காலம் குறைவதற்கு மிகவும் காரணமாகின்றன என்று டாக்டர் அப்ரார் கூறுகிறார். எனவே, தவறான உணவைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
5. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்
மன அழுத்தம் அல்லது பதட்டத்தைத் தவிர்க்க, பலர் மது, புகையிலை அல்லது போதைப்பொருள் போன்றவற்றை உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால் இளைய தலைமுறையினர் அதிகம் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். அவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது ஒரு நபரின் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். இது மூளை மற்றும் எடை தொடர்பான பிரச்சனைகளை அதிகரிப்பதன் மூலம் இளமையிலே முதுமை ஏற்படுகிறது
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR