ஓவரா எகிறும் எடையை ஒரேயடியா குறைக்கலாம்.. வெள்ளரிக்காயை இப்படி சாப்பிடுங்க
Cucumber For Weight Loss: உடல் எடையை குறைக்க கடுமையான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க சிறந்த வழி: உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல், குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம். நாம் நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேமித்து வைக்கிறது. மேலும் நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு கலோரிகளை நாம் எரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாவிட்டால், கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகின்றது. அதே போல் உடல் பருமன் பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க கடுமையான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெள்ளரிக்காய் நன்மைகள்
வெள்ளரி சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கின்றன. வெள்ளரிக்காயில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல கூறுகள் காணப்படுகின்றன. ஆனால் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் பல தீமைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆகையால் இதை மிக அதிகமாக உட்கொள்ளாமல் சரியான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய் கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சக்தி நிலையம் என்று அழைக்கப்படுகிறது. இது சாண்ட்விச், சாலட், ராய்தா போன்ற பல வகையான சமையல் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. பச்சைக் காய்கறிகளில் வெள்ளரியும் ஒன்று.
உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காய்
எடையைக் குறைக்கவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் வெள்ளரிக்காய் மிகவும் உதவியாகக் கருதப்படுகிறது. வெள்ளரிக்காய் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, இதில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்றவை உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்.
வெள்ளரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
எலும்புகள்
வெள்ளரிக்காய் தோலில் அதிக அளவில் சிலிக்கா உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது. இது தவிர, இதில் உள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வெள்ளரிக்காய் சாப்பிடலாம். வெள்ளரிக்காயில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும்.
மலச்சிக்கல்
நீரிழப்பு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றால் பலர் செரிமானக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உடல் பருமன்
எடை இழப்புக்கு வெள்ளரிக்காய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. வெள்ளரிக்காயில் 96 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. இதை சாப்பிடுவதால் அதிக பசி ஏற்படாது. இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இது உடல் எடையை குறைக்க உதவும்.
வெள்ளரியை உணவில் சேர்த்துக் கொள்வது எப்படி:
உடல் எடையை குறைக்க, வெள்ளரிக்காயை பல வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக, சாண்ட்விச்சில் இதை சேர்ப்பதன் மூலம் அதன் சுவையை அதிகரிக்கலாம். நீங்கள் விரும்பினால், அதை உங்களுக்கு பிடித்த சூப்பில் சேர்த்தும் உட்கொள்ளலாம். ருசியான வெள்ளரிக்காய் பக்கோடா செய்து உட்கொள்ளலாம். வெள்ளரிக்காய் ஜூஸ் அல்லது சாலட் சாப்பிடுவதும் உடல் எடையை குறைக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ