உடல் எடையை வேகமா குறைக்கணுமா? பப்பாளியை இப்படி சாப்பிட்டு பாருங்க
Papaya For Weight Loss: சில எளிய மற்றும் இயற்கையான வழிகளிலும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்பு டிப்ஸ்: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு.
தற்போது மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை பொதுவான பிரச்சனைகளாக மாறியுள்ளன. எடை அதிகரிப்பதால் வயிறு பெரிதாகி, தோற்றத்தை வித்தியாசமாக மாற்றுகிறது. இதனால் நம்பிக்கை குறைவதுடன் பல வித உடல் நல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. உடல் எடையை குறைக்க பலர் பல வித கடினமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய மற்றும் இயற்கையான வழிகளிலும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடையை குறைக்க உதவும் பப்பாளி
எடை குறைக்கும் முயற்சியில் பப்பாளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எடை இழப்புக்கு பெரிய அளவில் உதவுகிறது. பப்பாளியில் எடையைக் கட்டுப்படுத்த உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது அதிக நார்ச்சத்து மற்றும் மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. இந்த காரணங்களினால், கொழுப்பைக் குறைப்பதிலும், எடையைக் குறைப்பதிலும் பப்பாளிக்கு நிகரே இல்லை என்று கூட கூறலாம். உடல் எடையை குறைகக் கீழ்கண்ட நான்கு வழிகளில் பப்பாளியை உடலில் சேர்த்துக்கொள்ளலாம்.
எடையை குறைக்க பப்பாளியை இப்படி உட்கொள்ளலாம்:
பப்பாளி பழச்சாறு செய்து குடிக்கவும்
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் பப்பாளி பழச்சாறு செய்து குடிக்கலாம். இதில் உள்ள சத்துக்கள் உடல் கொழுப்பை குறைத்து, உடற்தகுதியை மேம்படுத்துகின்றன. பப்பாளியை உட்கொள்வது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க | வைரல் காய்ச்சலுக்கு பூச்சாண்டி காட்டும் கிச்சன் கில்லாடி மசாலாக்கள்
காலை உணவில் பப்பாளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்
உடல் எடையை குறைக்க பப்பாளியை காலை உணவில் சேர்க்க வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை அளித்து, கூடுதல் கொழுப்பை குறைக்கிறது. பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதனுடன் கருப்பு உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து காலை உணவாகவும் சாப்பிடலாம்.
பால் மற்றும் பப்பாளி
நீங்கள் ஹெவியான காலை உணவை உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர் என்றால், பால் மற்றும் பப்பாளி சாப்பிடுவது நன்மை பயக்கும். மிக்ஸியில் ஒரு கிளாஸ் பால் மற்றும் பப்பாளி துண்டுகளை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதில் சில உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளையும் (சீட்ஸ்) சேர்க்கலாம். இதை உட்கொள்வதால், வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும். மேலும், மீண்டும் மீண்டும் பசி எடுப்பது தடுக்கப்படும். இதன் காரணமாக எடை குறைக்கும் முயற்சியில் அதிக நன்மை கிடைக்கிறது.
பப்பாளி மற்றும் தயிர்
பப்பாளியை தயிருடன் கலந்து சாப்பிடுவதும் நன்மை பயக்கும். இது சுவை நிறைந்ததாக இருப்பதோடு எடையை குறைக்கவும் உதவுகிறது. ஒரு கிண்ணம் தயிருடன் பப்பாளி மற்றும் உலர் பழங்களை கலந்து உட்கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, எடையும் வேகமாக குறையும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கணிணியில் அதிகம் வேலையா... கண்ணை காக்கும் ‘இந்த’ உணவுகள் டயட்டில் இருக்கட்டும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ