இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கான ‘சில’ முக்கிய காரணங்கள்..!!
இந்தியாவில் 5 முதல் 6 லட்சம் பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் லான்செட் ஆய்வு இதழின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இளம் வயதில் மாரடைப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் 5 முதல் 6 லட்சம் பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் லான்செட் ஆய்வு இதழின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். இதற்கு கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உட்பட பல காரணங்கல் உள்ளன. கொலஸ்ட்ரால் அதிகரிப்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இது இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளுக்கு உங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம். கொலஸ்ட்ரால் என்பது நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDLகொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL கொலஸ்ட்ரால் என இரண்டு வகைகள் உள்ளன. கெட்ட கொலஸ்ட்ரால் தான் உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. நல்ல கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நல்ல கொலஸ்ட்ரால் உடலின் சிறந்த செயல்பாட்டிற்கு தேவைப்படுகிறது. ஏனெனில் இது உங்கள் இரத்த நாளங்களில் இருந்து கெட்ட கொழுப்பை அகற்றுகிறது.
இளம் வயதில் மாரடைப்புக்கான காரணங்கள்
நிபுணர்களின் கூற்றுப்படி, 40 மற்றும் 50 வயதுக்குட்பட்டவர்களில் மாரடைப்பு வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம்
2. அதிக மன அழுத்தம்
3. மாசுபாடு
4. அதிக கொலஸ்ட்ரால் அளவு
5. உயர் இரத்த அழுத்த பிரச்சனை
6. உடல் பருமன்
7. ஸ்டெராய்டுகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்ளுதல்
8. நிபுணர் ஆலோசனை இல்லாமல் கடினமாக உடற்பயிற்சி செய்தல்
மேலும் படிக்க | இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை வேகமாக குறையுமா? பதில் இதுதான்!
ஆரோக்கியமான மக்களுக்கு கூட ஏற்படும் இதய செயலிழப்பு சமபவங்கள்
சமீபத்தில், ஆரோக்கியமான மக்களுக்கு கூட மாரடைப்பு ஏற்பட்ட பல சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. விளையாட்டு வீரர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும்போது மாரடைப்பால் இறந்தார். இந்த ஆண்டு நவராத்திரியின் போது, கர்பா மற்றும் தண்டியா செய்யும் போது மாரடைப்பு மற்றும் மக்கள் இறந்ததாக செய்திகள் வந்தன. அதே சமயம் இவர்களுக்கு இதய நோய் இல்லை எனவும் கூறப்படுகிறது. .இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரோக்கியமான 38 வயது இளைஞர் ஒருவருக்கு ரயிலில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இவை, நிபுணர்கள் ஆலோசனை இல்லாமல் கடினமாக உடற்பயிற்சி செய்தல் மற்றும் கடினமான டயட் முறையை பின்பற்றுதல் ஆகியவை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஆரஞ்ச் பழத்தை சாப்பிட வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ