உடல் எடையை குறைக்க மசூர் பருப்பு சாப்பிடுவது எப்படி: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு உடல் பருமன் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிக எடை உடலில் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பல நேரங்களில் மக்கள் உடல் எடையை குறைக்க ஜிம்மில் பல மணிநேரம் செலவிடுகிறார்கள். கடினமான உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், என்ன செய்தாலும், சிலரால் தங்கள் எடையை குறைக்க முடிவதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை இழப்புக்கு, லேசான மற்றும் சுவையற்ற உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால், சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். எடை இழப்புக்கு ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இதனை உட்கொள்வதால், உடல் வலிமையுடன் இருப்பதுடன், பலவீனமும் நீங்கும். இலகுவாக ஜீரணமாகக்கூடியதாக இருப்பது மட்டுமின்றி, பருப்பு உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. இதில் காணப்படும் நார்ச்சத்து வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் நீக்குகிறது. பருப்பு எடையைக் குறைப்பதோடு, தொப்பையையும் குறைக்கிறது.


உடல் எடையை குறைக்க மசூர் பருப்பை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என பல சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். உடல் பருமனை குறைக்க இந்த பருப்பை எப்படி உட்கொள்வது என இந்த பதிவில் காணலாம். 


மசூர் தால்


மசூர் பருப்பு கொண்டு செய்யப்படும் தால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை சாப்பிட, மசூர் பருப்பை பிரஷர் குக்கரில் 2 முதல் 3 விசில் வரை வேக வைக்க்கவும். அதன் பின்னர் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 1 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, சீரகம், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பருப்பில் கலக்கவும். உங்கள் மசூர் பருப்பு தயார். இதை ரொட்டி அல்லது பரோட்டாவுடன் சாப்பிடலாம்.


மேலும் படிக்க | உடல் பருமன் நிச்சயமா குறையும்... ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறும் ‘4’ டிப்ஸ்!


மசூர் பருப்பு கிச்சடி


உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான மசூர் பருப்பு கிச்சடியையும் செய்யலாம். மசூர் பருப்பு கிச்சடி சத்தானது மற்றும் நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இதை செய்ய, பருப்பு, சிறிது அரிசி மற்றும் சில பச்சை காய்கறிகளை கலந்து பிரஷர் குக்கரில் சமைக்கவும். இந்த கிச்சடி எளிதில் ஜீரணிக்கக்கூடியதாக இருப்பதைத் தவிர, சுவையாகவும் இருக்கும். மதிய உணவில் இதை செய்து சாப்பிடலாம்.


மசூர் பருப்பு சூப்


உடல் எடையை குறைப்பதோடு தொப்பையையும் குறைக்க விரும்பினால், மசூர் பருப்பு சூப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மசூர் பருப்பு சூப் செய்ய, பிரஷர் குக்கரில் பாலக் கீரை மற்றும் மசூர் பருப்பை நன்றாக வேக வைக்கவும். இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து பருப்பு கீரை கலவையை விட்டு சிறிது நேரம் கிளறவும். இந்த சூப் சுவையாக இருப்பதோடு, உடலில் ஹீமோகுளோபினையும் அதிகரிக்கிறது.


மசூர் பருப்பு சில்லா


உடல் எடையையும் குறைக்க வேண்டும், சுவையான உணவையும் சாப்பிட வேண்டுமா? அப்படியானால், மசூர் பருப்பு சில்லா செய்து சாப்பிடலாம். மசூர் பருப்பு சில்லா செய்ய, மசூர் பருப்பை இரவில் ஊற வைக்கவும். காலையில் மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது அதில், வெங்காயம், தக்காளி அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற காய்கறிகளை சேர்த்து அடை போல் வார்க்கவும். சுவையான, ஆரோக்கியமான மசூர் பருப்பு சில்லா தயார். 


எடையைக் குறைக்க மசூர் பருப்பை இந்த வழிகளில் உட்கொள்ளலாம். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால், அதை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நீரிழிவு முதல் இதயம் வரை... நலம் பல தரும் அர்ஜூனா மர பட்டை..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ