சிறுநீரக கல் கரைய வைத்தியம்!!
சீறுநீரக கல் பிரச்னை இன்றைக்குஅனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம்.
சிறுநீரகக் கல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலில் ஏற்படும் நீர்வறட்சி, தவறான உணவு முறைகள், உப்பு, மசாலா மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம் குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது போன்றவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள் ஆகும்.
சிறுநீரக கல் கரைய வழிகள்:
* 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தினால் சிறுநீரக கல் கரையும்.
* வாழைத்தண்டு முள்ளங்கி சாறு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும்.
சிறுநீரக கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
* உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
*கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை தவிர்க்க வேண்டும்.