Health Remedy: இந்த மரத்தின் பழம் மட்டுமல்ல இலையும் அற்புத பலன்களைத் தரும்
பப்பாளி மரத்தின் உயரத்தில் தான் அதன் காய் இருக்கும். மிகவும் உயர்ந்த பலன்களை கொண்டுள்ள என் பழத்தை தலை நிமிர்ந்து பாருங்கள் என்று சொல்கிறதோ பப்பாளி மரம்?
பப்பாளி மரத்தின் உயரத்தில் தான் அதன் காய் இருக்கும். மிகவும் உயர்ந்த பலன்களை கொண்டுள்ள என் பழத்தை தலை நிமிர்ந்து பாருங்கள் என்று சொல்கிறதோ பப்பாளி மரம்?
பப்பாளி பழம், மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் பழம், விலை மலிவான பழம், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், பப்பாளியின் இலைகள் கூட ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பவை என்பது தெரியுமா?
ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் எனக்கூறப்படும் பப்பாளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து (Vitamins and Fibre) மற்றும் பல தாது சத்துக்கள் உள்ளன, எல்லா பருவத்திலும் எளிதாகக் கிடைக்கும் பப்பாளியில் உள்ள நார்ச்சத்து உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பது மட்டுமின்றி, எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
READ ALSO | ஆரோக்கியமான விந்தணுவிற்கு உத்தரவாதம் தரும் பழம்
பப்பாளியின் இலையில் உள்ள சிறப்பு மூலக்கூறுகள் ரத்தத்தின் பிளேட்லெட்களை துரிதமாக அதிகரிக்க உதவுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட பப்பாளி மரத்தின் இலைகள் பல நோய்களுக்கு மட்டுமல்ல, அழகுசாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தோல் அலர்ஜியால் அவதிப்படுபவர்கள், பப்பாளியை சாப்பிடக்கூடாது, ஏனெனில் பப்பாளியில் (Papaya the Fruit) சிட்டினேஸ் என்ற நொதி உள்ளது.
இதன் காரணமாக சரும அலர்ஜி உள்ளவர்கள் பப்பாளிப் பழத்தை சாப்பிட்டால், தும்மல், சுவாசிப்பதில் சிரமம், இருமல், கண்களில் நீர் வடிதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.ஆனால், பப்பாளியின் இலையை இவர்கள் பயன்படுத்தலாம்.
ALSO READ | பப்பாளிய சாப்பிட்டா இந்த பிரச்சனை வருமா?
எனவே, பப்பாளியின் இலையில் இருந்து எடுக்கப்படும் சாற்றை பயன்படுத்தினால் சில நோய்களை குணமாக்கலாம். அதில் முக்கியமானது டெங்கு காய்ச்சல். இந்த காய்ச்சலுக்கு இதுவரை பிரத்யேக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த வகைக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் பிளேட்டுலெட்டுகள் வெகுவாக குறைந்துவிடுவதால், ஆரோக்கியம் மிகவும் சீர் கெட்டு விடுகிறது.
எனவே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க சிறந்த தீர்வு பப்பாளி இலைச்சாறு என்று சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
பப்பாளி இலைகளை அரைத்து, காயங்களில் பூசினால் ,காயங்கள் விரைவில் குணமடையும் என்பது தெரியுமா? பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட பப்பாளி மரத்தின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு, சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
பப்பாளி இலைகளை அரைத்து அதனுடன் கடலை மாவு கலந்து சருமத்தில் தடவி, பத்து நிமிடங்களில் கழிவினால், பளபளக்கும் சருமத்திற்கு பப்பாளியின் இலையே கேரண்டி கொடுக்கிறது.
Also Read | 2 வாரங்களில் எடையை 6 கிலோ குறைக்க வேண்டுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR