Reverse Walking/Backward Walking Benefits: ரிவர்ஸ் வாக்கிங் என்னும் பின்னோக்கி நடக்கும் நடைபயிற்சி. இந்த வார்த்தை சற்று வினோதமாக இருந்தாலும் அதன் பலன்களை அறிந்தால் நீங்களும் ரசிகராக ஆகிவிடுவீர்கள். நடைப்பயிற்சி என்பது நாள் முழுவதும் முழு உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவி செய்யும் என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் தற்போது ரிவர்ஸ் வாங்கிங் என்னும் பின்னோக்கி நடக்கும் நடை பயிற்சி ட்ரெண்டிங்காக ஆகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலுக்கும் மனதுக்கும் இடையே ஆன சமநிலை


பின்னோக்கிய நடைபயிற்சி உங்கள் உடலுக்கும் மனதுக்கும் இடையே சமநிலையை மேம்படுத்துகிறது. பின்னோக்கி நடக்கும் போது உங்கள் மனம் உங்கள் உடலின் இயக்கத்தில் முழுமையாக கவனம் செலுத்துகிறது. இது உடலின் சமநிலையை அதிகரிக்கும் அதே நேரத்தில் மனதையும் ஒருமுகப்படுத்துகிறது. இது தவிர, உடல் எடையைக் குறைக்கவும், முதுகுவலி மூட்டு வலியை போக்கவும் உதவும்.


பின்னோக்கிய நடைபயிற்சி குறித்த ஆய்வு


பின்னோக்கிய நடைபயிற்சி தொடர்பான ஒரு ஆய்வில், கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் உடலியல் நிபுணர் ஜாக் மெக்னமாராவும் பின்னோக்கிய நடைபயிற்சி நன்மை பயக்கும் என்று விவரித்தார். அதே நேரத்தில், மெல்போர்னில் உள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் பிசியோதெரபியின் இணைப் பேராசிரியர் டாக்டர் பார்டன், பின்னோக்கி நடப்பது உடலுக்கும் மனதுக்கும் இடையே ஒரு வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்க உதவுகிறது (HealthTips) என்கிறார்.


முளை ஆரோக்கியம்


பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வது, மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு பயிற்சி என்பதால், மூளையை மிகவும் அலெர்ட்டாக வேலை செய்ய உதவும். குறிப்பாக மூளை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்க முடியும்.


மேலும் படிக்க | ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.... உங்களை ஏமாற்றாத டயட் பிளான் இதோ


இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியம்


இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சிறந்த கார்டியோ பயிற்சி நடைபயிற்சி தான் என்கின்றனர் நிபுணர்கள். அதிலும், பின்னோக்கி செய்யும் நடைப்பயிற்சி இதயம் மற்றும் நுரையீரலுக்கு ஆக்சிஜனை சீராக வழங்கும். 


உடல் பருமன்


வழக்கமான நடைப்பயிற்சியால் எரிக்கப்படும் கலோரிகளின் அளவைக் காட்டிலும் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும் போது கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும் என்பதால், உடல் பருமன், தொப்பை கொழுப்பு ஆகியவற்றை வேகமாக எரிக்கலாம். பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும்போது தசைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக வேலை செய்யும். அதனால் வழக்கத்தைவிட அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது.


மூட்டு வலி


பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால், மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம் குறையும். இதனால், மூட்டுகளில் ஏற்படும் வலி, குறிப்பாக முழங்கால் வலியைக் குறையும். எனினும், ஏற்கனவே முழங்கால் பிரச்சினைகள், கீல்வாதம், முடக்குவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், மருத்துவரை ஆலோசனை செய்து எந்த அளவிற்கு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை பெற்றுக் கொண்டு செய்வது நல்லது.


இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் கொழுப்பை கரைக்கவும் உதவும் சிறந்த பயிற்சியாக நடைபயிற்சி, கருதப்படுகிறது. நடைபயிற்சி மூலம் நமது எலும்புகள் தசைகள் ஆகியவையும் வலுப்பெறும். எனினும், ரிவர்ஸ் வாக்கிங் ஒட்டுமொத்த உடலையும் வலிமைப்படுத்துவதோடு, மூளை அலர்டாக இருக்க உதவுகிறது. 15 நிமிடம் ரிவர்ஸ் வாக்கிங் செய்தாலே கொழுப்பை மிக விரைவாக குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். ரிவர்ஸ் வாக் முதலில் கடினமான பயிற்சியாக தெரிந்தாலும், அதைச் செய்து பழகினால், எளிதான பயிற்சியாக ஆகிவிடும். 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ