Russia - ukraine War: இனி நீங்கள் சப்பாத்தி சாப்பிட முடியாது - ஏன்?
ரஷ்யா - உக்ரைன் போர் நீடித்தால், பல நாடுகளில் சப்பாத்தி சாப்பிட முடியாத நிலை உருவாகும் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலியாக கடந்த ஒரு வாரமாக சர்வதேச கமாடிட்டி சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கோதுமை, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மக்காச்சோளம் மற்றும் மரக்கட்டைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், கோதுமை விலை 40 சதவீதமும், கச்சா எண்ணெய் 26-30 சதவீதமும், இயற்கை எரிவாயு 22 சதவீதமும், மக்காச்சோளம் 14 சதவீதமும், மரத்தின் விலை 10 சதவீதமும் உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி: சபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றின
இதே நிலையில் போர் இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால், உலகப் பொருளாதாரத்தில் இந்த விலையேற்றம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சீனா மற்றும் இந்தியாவிற்கு அடுத்தபடியாக கோதுமை உற்பத்தியில் ரஷ்யா உள்ளது. இப்போது ஏற்பட்டிருக்கும் போர் சூழலால் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி நிறுத்தம் காரணமாக ரஷ்யா, உக்ரைனிடமிருந்து கோதுமை வாங்கும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கோதுமை விநியோகத்தில் உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. உக்ரைன் கோதுமை ஏற்றுமதியில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சர்வதேச சந்தைகளில் கோதுமை விலை உயர்வால் சப்பாத்தி விலை உயரத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து இந்த விலையேற்றம் இருந்தால் சப்பாத்தி என்பது பல நாட்டு மக்களுக்கு காஸ்டிலியான உணவாக மாறும். APEDA அறிக்கையின்படி, கோதுமை விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்வை சந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: கோரிக்கைகளை ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் - புடின்
இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டாலும், உலகளவிலான விலை உயர்வுகள் இந்திய கோதுமை சந்தையிலும் கட்டாயம் எதிரொலிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், உள்நாட்டு கோதுமை சந்தையிலும் கோதுமையின் விலை உயரும். ஏற்கனவே விலை உயரத் தொடங்கியுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை நேபாளம், பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்கிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR