கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து உலகம் சிறிது சிறிதாக மீண்டு வருவதற்கு, கோவிட் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டது ஒரு மிகப் பெரிய மைல்கல் ஆகும். தற்போது அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி ஒவ்வொரு நாடும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருபுறம் தடுப்பூசி பற்றாக்குறை நிலவினால், மறுபுறம் தடுப்பூசி மருந்து வீணாவது கவலையளிக்கிறது. இந்த கவலையை தீர்க்க தாய்லாந்து நிபுணர்கள் ரோபோ கையை (robotic arm) உருவாக்கியுள்ளனர்.


மூன்றாம் உலக நாடுகள் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட போதுமான அளவு மருந்தைப் பெறவே போராடும் நிலையில், மருந்துகளை வீணடிக்காமல் அவற்றை மிகவும் திறம்பட பயன்படுத்த ஒரு யோசனையைக் கொண்டு வந்துள்ளது தாய்லாந்து.


Also Read | நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் 5 உணவு வகைகள்


பயன்படுத்தக்கூடிய தடுப்பூசிகளின் மருந்து குப்பிகளை வீணடிப்பது தொடர்பாக உலகெங்கிலும் வரும் தகவல்கள் கவலையை அதிகரிக்கச் செய்கின்றன. இருப்பினும், தாய்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, மூன்றாம் உலக நாடுகளுக்கு உதவ ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் தடுப்பூசி மருந்துக் குப்பியின் ஒரு சொட்டு மருந்து கூட வீணாகாமல் பாதுகாக்க முடியும்.  


"ஆட்டோவாக்" (AutoVacc) என்று அழைக்கப்படும் ஒரு ரோபோ கை, ஒரு குப்பியில் இருந்து வெறும் நான்கு நிமிடங்களில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் கிட்டத்தட்ட 12 டோஸ்களை எடுத்துவிடும். இந்த இயந்திரம் தாய்லாந்தில் உள்ள சுலாலாங்கோர்ன் பல்கலைக்கழக (Chulalongkorn University) ஆராய்ச்சியாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்டது.


வழக்கமாக, ஒரு மருத்துவ நிபுணர் ஒரு குப்பியில் இருந்து 10 டோஸ் வரை மருந்தை எடுக்கலாம். ஆனால் இந்த AutoVacc ரோபோ கை வழக்கமான நடைமுறையில் இருந்து கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிக மருந்தை எடுக்கும்.


Also Read | ஆகஸ்ட் 24 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!


"ஒவ்வொரு தடுப்பூசி குப்பியிலிருந்தும் 12 டோஸ் வரை AutoVacc மருந்தை எடுக்குக்ம். எனவே கூடுதலாக 20% மருந்தைப் பெறுவதற்குக் இந்த இயந்திரம் உத்தரவாதம் அளிக்கிறது" என்று பல்கலைக்கழகத்தின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஆராய்ச்சி மையத்தின் (Biomedical Engineering Research Center) முன்னணி ஆராய்ச்சியாளர் ஜுத்தமாஸ் ரதனவர்போர்ன் கூறினார்.


"பொதுவாக 1 மில்லியன் மக்களுக்கு அஸ்ட்ராஜெனெகா மருந்தை திட்டமிட்டால், இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது, 1.2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட முடியும்" என்று அவர் கூறுகிறார்.


ரோபோ கை மருத்துவ நிபுணர்களின் உடல் உழைப்பைச் குறைக்கவும் உதவுகிறது. "சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சோர்வாக இருக்கும்போது, மனிதப் பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன, எனவே இயந்திரங்களை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று ரத்தினவர்போர்ன் (Ratanavaraporn) விளக்கினார்.


Also Read | விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை லிட்டர் 4000 ரூபாய்!


கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு (Delta variant) காரணமாக தாய்லாந்தில் கோவிட் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் கோவிட் மூன்றாம் அலையும் வந்தால், அதை சமாளிக்க இந்த செயற்கை கை உதவியாக இருக்கும்.  


கோவிட் பாதிப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக முன்பு தாய்லாந்து உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றது. ஆனால் அந்நாட்டில் தடுப்பூசி போடும் விகிதம் குறைவாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.


இப்போது இந்த இயந்திரக் கை தாய்லாந்துக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தடுப்பூசியை வீணடிக்காமல், முழுமையாக பயன்படுத்த உதவியாக இருக்கும்.


Also Read | இதை சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR