தாம்பத்ய வாழ்க்கையை குலைக்கும் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
திருமணமான ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, மோசமான விந்தணுக்களின் தரம் போன்ற பாலியல் பிரச்சனைகள் திருமண வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும்.
திருமணமான ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, மோசமான விந்தணுக்களின் தரம் போன்ற பாலியல் பிரச்சனைகள் திருமண வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். இன்றைய கால கட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை என்பது இளம் தம்பதியர் பலரின் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், ஆண்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில உணவுகளையும், சில பழக்கங்களையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தவறான உணவு உங்களின் உடலை நேரடியாக பாதிக்கிறது. தவறான உணவுகளை உட்கொள்வது குழந்தையின்மை பிரச்சனையை அதிகரிக்கும்.
இன்றைய பிஸியான வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான ஆண்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு உணவு பழக்கங்களும், உடர்பயீற்சி என்பதே இல்லாத நிலையிலும் பலவிதமான பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அதிலும் பெரும்பாலான ஆண்கள் தங்களின் பாலியல் பிரச்சனைகள் குறித்து பேச அதிக தயக்கம் கொள்கிறார்கள்.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்கள் விந்தணு குறைபாடு உள்ள பல்வேறு பாலியல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். உடலை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். அத்தகைய சூழ்நிலையில் ஆண்கள், தாம்பத்திய வாழ்க்கை சிறக்கவும், பாலியல் பிரச்சனைகளில் இருந்து விபடவும் என்னென்ன உணவு பொருட்களையும், பழக்கங்களையும் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இனிப்பு உணவுகள்
இனிப்பு பொருட்களை தினமும் உட்கொள்வது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை அதிகரிக்கும். அதே நேரத்தில், இனிப்புப் பொருட்களை அதிகம் உட்கொள்வது விந்தணு எண்ணிக்கை குறைவதோடு பல நோய்களையும் ஏற்படுத்தும். அதனால் ஆண்கள் இனிப்புகளை அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைகிறது. அதனால்தான் இன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உணவில் இருந்து விலக்க வேண்டியது அவசியம். இதனை உட்கொள்வதால் ஆண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, பொதுவான் உடல் ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கும்.
அதிக உப்பு உள்ள உணவு பொருட்கள்
அதிக உப்பு உள்ள உணவுகள் ஆண்களின் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும். அதில் உள்ள சோடியம் தான் அதற்கு காரணம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் தந்தையாக வேண்டும் என்று நினைத்தால், இன்றிலிருந்தே பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவற்றை உட்கொள்வதைக் குறையுங்கள். ஏனெனில் இதில் அதிக அளவில் சோடியம் உள்ளது.
மேலும் படிகக் | நீங்கள் ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்திவிட்டால் உடலுக்குள் என்ன நடக்கும்?
புகைபிடித்தல்
புகைபிடித்தல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் தினமும் சிகரெட் புகைத்தால், விந்தணு குறைவதோடு, அதன் தரமும் குறைகிறது. நீங்கள் சிகரெட் புகைப்பவராக இருந்தால், இன்றே அதனை கைவிடவும். ஆண்களின் மலட்டுத்தன்மையை அதிகரிக்க இது மிகப் முக்கிய காரணம் என்பதால் கவனமாக இருங்கள்.
மதுப் பழக்கம்
மது அருந்துவதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரத்தையும் குறைகிறது. இதனால் ஆண்கள் மது அருந்துவதை தவிர்ப்பதே நல்லது. வாரத்திற்கு ஒரு முறை அல்லது எப்போதாவது எடுத்துக் கொள்ளும் போது அதனால், பாதிப்பு அவ்வளவாக இருக்காது. ஆனால், தினமும் மது அருந்துவது நிச்சயம் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்
பாலியல் பிரச்சனை
பாலியல் பிரச்சனைகளால் திருமண வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, தந்தையாகும் கனவு கூட நிறைவேறாமல் போகும். எனவே இதனை மனதில் வைத்துக் கொண்டு உணவு பழக்கங்களில் கவனம் செலுத்துவது நல்லது. திருமணமான ஆண்களுக்கு விறைப்புத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, மோசமான விந்தணுக்களின் தரம் போன்ற பாலியல் பிரச்சனைகள் ஏற்பட்டால், அவரது திருமண வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, தந்தையாகும் கனவு கூட நிறைவேறாமல் போக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் நீர்ச்சத்து வரை…இளநீர் குடித்தால் உடலில் ஏற்படும் மேஜிக்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ