கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது கர்ப்பத்தைத் தடுக்க பெண்களுக்கு  மிகவும் எளிதான, ஒரு பயனுள்ள நடைமுறையாக கருதப்படுகிறது. ஆனால், அது பாதுகாப்பானது தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நாம் சில காரணனங்களுக்காக எடுத்துக் கொள்ளும், பிற வகை மருந்து மாத்திரைகளையும் போலவே, கருத்தடை மாத்திரைகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு என்கின்றனர் நிபுணர்கள். இதனை ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். மருத்துவ நிபுணர்கள் இது பற்றி அளிக்கும் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த மகப்பேறு மருத்துவரும், பிரிஸ்டைன் கேரின் இணை நிறுவனருமான டாக்டர். கரிமா ஸ்வாஹானி, கருத்தடை மாத்திரைகள் குறித்து கூறுகையில், இவை ஹார்மோன் அடிப்படையிலானவை என்றும் இதில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டின் கலவை அல்லது ப்ரோஜெஸ்டின் மட்டுமே உள்ளது. இவை கருப்பையில் இருந்து முட்டைகள் வெளியேறுவதைத் தடுக்கின்றன . மேலும், இவை, கருப்பை வாயைச் சுற்றியுள்ள சளியை அடர்த்தியாக்கி, விந்தணுக்கள் கருப்பையை அடைவதை தடுக்கின்றன. இந்த மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொண்டால், கரு உருவாவது 99 சதவீதம் தடுக்கலாம்.


கருத்தடை மாத்திரைகள் பெரும்பாலான பெண்களுக்கு பாதுகாப்பானது என்றாலும், சில பெண்களுக்கு இதனால் தீவிர பக்க விளைவுகள் ஏற்படலாம் என்கின்றனர்  நிபுணர்கள். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்


1. இதய நோய்:  கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது இதய நோய் மற்றும் மாரடைப்பை ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.


2.  இரத்த உறைவு: கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வது, இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கலாம், குறிப்பாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள் அல்லது 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் இருக்கும்.


3. மார்பகப் புற்று நோய்: கருத்தடை மாத்திரைகளை  நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோயின்( Breast Cancer) அபாயத்தை அதிகரிக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


4.  கல்லீரல் பிரச்சனைகள்: கருத்தடை மாத்திரைகள் சில பெண்களுக்கு கல்லீரல் கட்டிகளை ஏற்படுத்தும் என்கின்றனர்  நிபுணர்கள்.


மேலும் படிக்க | மார்பக் புற்றுநோய்க்கு காரணமாகும் உணவு பொட்டலங்கள்... பகீர் ரிபோர்ட் 


5. மனநிலை மாற்றங்கள் மற்றும் மனச்சோர்வு: கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாக, சில பெண்களுக்கு மனநிலை மாற்றங்கள், பதட்டம் அல்லது மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் உண்டாகலாம்.


6. கருத்தடை மாத்திரைகள் குமட்டல் மற்றும் இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஏற்கனவே செரிமான பிரச்னைகள் உள்ள பெண்களுக்கு அதிகம் இருக்கும். மாத்திரை சாப்பிடும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், இந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும். 


7. உடல் பருமன்:  கருத்தடை மாத்திரைகள் உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதனால், சில பெண்களுக்கு உடல் எடை கூடும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை எரிக்கும் ராகி... சில சுவையான ரெஸிபிகள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ