பாலியல் வல்லுனர்வால் டெங்கு காச்சல் பரவுவதாக ஸ்பெயினின் சுகாதார ஆணையம் கண்டறிந்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு கொசுவால் மட்டுமே பரவும் இன்று இதுவரை மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் பாலுறவு கொண்டாலும் டெங்கு பரவும் என்ற அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 41 வயதுடைய ஒரு ஆண் ஒருவர் சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு வைரஸ் பரவியதை உறுதி செய்தனர். ஆனால், அவர் வசித்த பகுதியில் டெங்கு இருப்பதற்கான அறிகுறியே இல்லை என்பதால் எப்படி அவருக்கு டெங்கு பரவியது என்று மருத்துவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.


ஒருவேளை டெங்கு பாதித்த பகுதிக்கு அவர் பயணம் செய்திருக்கலாம் என்றால் அவர் சமீபத்தில் எங்கேயும் பயணம் செய்யவில்லை என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் மேலும் மருத்துவர்கள் விசாரித்தபோது அவர் தன்னுடன் தங்கியிருந்த ஆண் ஒருவருடன் பாலுறவு கொண்டதாக கூறினார். இதனையடுத்தே பாலுறவு மூலம் டெங்கு பரவியிருக்கலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர். எனவே டெங்கு பாதித்த ஒருவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவருடன் பாலுறவு கொண்டால் அவருக்கும் டெங்கு பாதிக்கலாம் என்பது உறுதியாகியுள்ளதாக ஸ்பெயின் சுகாதாரத் துறையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.