பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் எப்போதும் இளமை ததும்ப இருக்கிறார். இதற்கு மிக முக்கியமான காரணம் அவரின் ஒழுக்கமான வாழ்க்கை முறை, ஆரோகியமான உணவு, தினம்தோறும் உடற்பயிற்சி ஆகியவையே காரணம். இருப்பினும் அவர் எப்படி இதனை எல்லாம் பின்பற்றுகிறார்? என்ற ஆச்சரியம் பலருக்கும் இருக்கலாம். பொதுவாகவே பிரபலங்கள் தங்களின் உடற்தகுதியைப் பராமரிக்க கடுமையான டயட்டைப் பின்பற்றுவார்கள். வெவ்வேறு உடற்பயிற்சி இலக்குகளுக்கு பிரபலங்களுக்கு வெவ்வேறு வகையான உணவுகள் தேவை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த 4 உணவுகளை தினசரி சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்!


ஆனால், இதில் ஷாருக்கான் மட்டும் வித்தியாசமானவராக இருக்கிறார்.தந்தூரி சிக்கனை மட்டும் உணவாக எப்போதும் எடுத்துக் கொள்பவர் ஷாருக்கான். ஆம்! ஒருமுறை 2021 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது, சல்மான் கான், ஷாருக்கான் பற்றி அவரது சக நண்பர் ஒருவர் வெளிப்படையாக விஷயங்களை கூறினார். அதில் அவர்கள்  பின்பற்றும் உணவுமுறை குறித்தும் கூறினார். சல்மான் கான் பொறுத்தவரை எதற்கும் கட்டுப்பாடெல்லாம் விதித்துக் கொள்ளமாட்டாராம். விரும்பியதை சாப்பிட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். பிரியாணி, கொண்டைக்கடலை, சாதம் சாப்பிடுவது சல்மான்கானுக்கு மிகவும் பிடிக்குமாம்.


ஆனால் ஷாருக்கான் பொறுத்தவரை தந்தூரி சிக்கன் பிரியராம். அவர் சாதம், ரொட்டி சாப்பிடுவதை நான் பார்த்ததில்லை என்று ஷாருக்கானின் நண்பர் கூறினார். பல்வந்த் தலிவால் என்பவரும் ஷாருக்கான் உடனான சந்திப்பு குறித்து பேசும்போது, மலேசியாவில் ஒருமுறை அவரை சந்தித்தாராம். அப்போது ஷாருக்கான் கேட்ட மெனுவில்  மதியம் மற்றும் இரவு என இரண்டிலும் தந்தூரி சிக்கன் மட்டும் தவறாமல் இடம் பெற்றிருந்தது என தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, எல்லா உணவுகளைப் போலவே தந்தூரி சிக்கன்  சாப்பிடுவதிலும் நன்மை தீமைகள் இருக்கின்றன. தந்தூரி சிக்கனில் அதிக புரதம் இருப்பதால், இது நேரடியாக வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. தசைகளை பராமரிக்க உதவுகிறது. இது சாப்பிடும்போது சாப்பிட்ட முழு திருப்தியை கொடுக்கும். அத்துடன் ரத்த சர்க்கரை சீராக இருப்பதிலும், எடை மேலாண்மை செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என கூறியுள்ளனர். ஷாருக்கான் ஒரு  உணவை திரும்ப திரும்ப எடுத்துக்கொள்கிறார் என்றால் அவர் எந்த ஆலோசனையும் இல்லாமல் எல்லாம் எடுத்துக் கொள்ளமாட்டார் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மேலும் படிக்க | கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ