Dog Gets Monkeypox From Human: ஒரு நாய்க்குட்டிக்கு குரங்கம்மை நோய் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் உரிமையாளரிடமிருந்து வைரஸ் தாக்கிய நாய்க்குக் குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மனிதனிடமிருந்து விலங்குகளுக்கு மங்கிபாக்ஸ் வைரஸ் பரவுவதை உறுதிசெய்த உலக சுகாதார அமைப்பு, நோய் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அறிவுறுத்திவுள்ளது. மேலும் கழிவு மேலாண்மையின் அவசியமும் குரங்கம்மை நோயில் அவசியம் என்பதியும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்கு அம்மை நோய், ஒருவருடான நெருங்கிய தொடர்பினால் பரவலாம் என்றும், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்திய ஆடை, படுக்கை அல்லது பாதிக்கப்பட்டவரின் பொருட்கள், மேற்பரப்புகள் அல்லது துணிகளை யாராவது தொடும்போதும் பரவலாம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.


மேலும் படிக்க | சீனாவை தாக்கும் புதிய வைரஸ் தொற்று: லாங்யா நோய்த்தொற்றின் அறிகுறிகள்


உலகெங்கிலும் சுமார் 35,000 பேருக்கு நோய்த்தொற்று உள்ளதாக WHO தெரிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான பாதிப்புகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


மனிதனிலிருந்து நாய்க்கு வைரஸ் பரவுவது குறித்து, WHOவில் குரங்கு காய்ச்சலின் தொழில்நுட்ப முன்னணி டாக்டர் ரோசாமுண்ட் லூயிஸ் கூறினார்: “இது மனிதனிலிருந்து விலங்குக்கு பரவும் முதல் வழக்கு."இது முன்னர் தெரிவிக்கப்படவில்லை, மேலும் இது நோய்த்தொற்றின் முதல் நிகழ்வு என்று நாங்கள் நம்புகிறோம்.



"இது கவலை ஏற்படுத்தும் அபாயமாக உள்ளது. குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அபாயத்தின் காரணமாக தங்கள் செல்லப்பிராணிகளிடமிருந்து தனிமைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்யுமாறு பல பொது சுகாதார நிறுவனங்கள் அறிவுறுத்தியிருப்பதை நீங்கள் காணலாம். வீட்டில் உள்ள விலங்குகளை கட்டுப்படுத்துவதை விட வெளியில் சுற்றித் திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவது சிரமம். மேலும், குப்பை மேலாண்மை மிகவும் அவசியமானது. எனவே கழிவு மேலாண்மை முக்கியமானது, தனிமைப்படுத்தல் முக்கியம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், 35,000 க்கும் மேற்பட்ட குரங்கும்மை நோய் பாதித்தவர்கள் 92 நாடுகளில் இருக்கின்றனர். இதுவரை குரங்கம்மைக்கு 12 பேர் இறநதுள்ளனர், கடந்த வாரம் கிட்டத்தட்ட 7,500 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்தை விட 20% அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார்.


மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு குரங்கம்மை பரவியது முதன்முதலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், சில "திருப்புமுனை வழக்குகள்" இருப்பதை உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். தடுப்பூசிக்குப் பிறகு ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.


மேலும் படிக்க | இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி டிஸ்சார்ஜ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ