வயசான காலத்தில் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமா? அப்போ இதைசெய்யுங்க..
Uric Acid Home Remedies: சிறிய சிறிய விஷயங்களை சரியான நேரத்தில் கவனித்துக் கொண்டால், வயதான காலத்திலும் எலும்புகள் வலுவாக இருக்கும். யூரிக் அமிலத்தை பராமரித்தால் போதும் மூட்டுவலி சரியாகிவிடும்.
Managing Uric Acid In Body: இரத்தத்தில் அதிகப்படியான யூரிக் அமிலம் மூட்டுகள் மற்றும் திசுக்களில் படிகங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கும், வலி, வீக்கம் மற்றும் கீல்வாதம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். இதன் பொதுவான அறிகுறிகளில் மூட்டு வலி, புண் மற்றும் தோல் சிவத்தல் போன்றவை ஆகும்.
மனித உடலில் சாதாரண யூரிக் அமிலத்தின் அளவுகள் டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம்கள் (mg/dL) வரை இருக்கும். இருப்பினும், இந்த அளவுகள் வயது, பாலினம் மற்றும் சுகாதார நிலைமைகளைப் பொறுத்து மாறுபடலாம். பொதுவாக பெண்களுக்கு யூரிக் அமிலத்தின் அளவு 6 mg/dL ஆகவும், ஆண்களுக்கு 7 mg/dL ஆகவும் அளவிடப்படுகிறது. இதை தாண்டி யூரிக் அமிலத்தின் அளவு இருந்தால், மருத்துவரை அணுகி பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் உட்கொள்ளும் அன்றாட உணவில் சிலவகை உணவுகளை சேர்த்துக்கொண்டால், யூரிக் அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க - நோய்களை அடித்து விரட்டும் டிராகன் பழ ஜூஸ்... புற்றுநோய் முதல் சுகர் வரை!
கம்பு
அமில சுரப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு கம்பு அருமருந்து. இயற்கையாகவே கம்பில் பசையம் இல்லாததால் பசையம் உணர்திறன் கொண்ட நபர்களுக்கு மிகவும் நல்லது.
கம்பு தோசை
கம்பை சாதமாகவும், அரைத்து தோசையாகவும் பயன்படுத்தலாம். கம்பு ஒரு புறம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்றால், மறுபுறத்தில் நோய்களை குறைக்கும் தன்மையையும் கொண்டது
கம்பு மாவு
கம்பை மாவாக அரைத்து வைத்துக் கொண்டு, வெவ்வேறு விதமாக சமைத்து உண்ணலாம். கம்பு சாதம், கம்பு ரொட்டி, கம்பு கஞ்சி, கம்பு தோசை என விதவிதமாய் உண்டு. இதை உட்கொண்டால் யூரிக் அமில சுரப்பை சீராக்கலாம்.
செலரி விதைகள்
மருத்துவக் குணங்கள் நிரம்பிய செலரியில் சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் மூட்டு வீக்க நோய்களுக்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. செலரியின் இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்துவதும் யூரிக் அமில சுரப்பைக் குறைக்கும்.
மேலும் படிக்க - ஆரோக்கியமாக வாழ யாருக்குத் தான் ஆசையில்லை? தவிர்க்க வேண்டிய ஆபத்தான உணவுகள்!
தினை மாவு
கோதுமைக்கு பதிலாக தினை மாவு ரொட்டியை வழக்கமாக உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது, இதனால் மூட்டு வலியிலிருந்து விரைவான நிவாரணம் கிடைக்கும்.
தினை நார்ச்சத்து
மிகக் குறைவாக இருப்பதால் யூரிக் அமிலத்தை குறைப்பதற்கு தினை மாவு உதவும். தினையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்றுவதில் நன்மை பயக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் கொடுக்கபட்டு உள்ளது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.)
மேலும் படிக்க - எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ