வேகவைத்த முட்டையின் பக்க விளைவு: முட்டை புரதத்தின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது ஊட்டச்சத்தை அள்ளித்தரும் உணவாகும். இதன் மூலம் நமது தசைகள் வலுவடைகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜிம்மில் பயிற்சி செய்பவர்கள் வேகவைத்த முட்டைகளை சாப்பிட விரும்புவதற்கு இதுவே காரணம். இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைத்தாலும், வேகவைத்த முட்டைகளை அதிகமாக சாப்பிடக்கூடாது, ஏனெனில் அது தீங்கு விளைவிக்கும்.வேகவைத்த முட்டைகளால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.


வேகவைத்த முட்டையின் பக்க விளைவுகள்


வேகவைத்த முட்டைகளாலும் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என பல சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். எனவே அவற்றை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். சிலர் வேகவைத்த முட்டையை அதிகமாக சார்ந்திருக்கிறார்கள். இதனால், மற்ற உணவுகளில் நாட்டம் இல்லாமல் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல் போய்விடுகிறது.


மேலும் படிக்க | Male Fertility: ஆண் மலட்டு தன்மைக்கு மிக முக்கிய காரணம் 


மற்ற ஆரோக்கியமான உணவுகளை விட்டுவிடாதீர்கள்


வேகவைத்த முட்டை டயட்டை உண்பவர்கள் பெரும்பாலும் மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பட்டாணி போன்ற முக்கியமான பொருட்களிலிருந்து விலகி இருக்கத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக உடலில் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் குறையத் தொடங்குகின்றன. இது சமச்சீர் உணவின் செயல்முறையை பாதிக்கும் என்பதால், வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவதுடன் அத்தியாவசிய உணவுகளை தவிர்க்காமல் இருப்பது நல்லது.



வேகவைத்த முட்டை: சில முக்கிய குறிப்புகள்


- உங்களுக்கு ஜிம் செல்லும் பழக்கம் இருந்து, நீங்கள் ஒரு நாளைக்கு 2 வேகவைத்த முட்டைகளை சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை.


- ஆனால் இதனுடன் மற்ற ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிடுங்கள். 


- முட்டையில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது, இது இதயம் மற்றும் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். 


- முட்டையை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.


- இருப்பினும் வேகவைத்த முட்டையை குறைந்த அளவில் சாப்பிடுபவர்கள் பயப்பட தேவையில்லை.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Anti Aging: வயசானாலும் முகமும் பொலிவும் அப்படியே இருக்க இந்த பழச்சாறுகள் போதும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR