தீராத தலைவலியா... மாத்திரை வேண்டாம்... இந்த வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்
Headache Home Remedies: தலைவலி என்பது ஒரு நரம்பியல் சார்ந்த பிரச்சனை. மூளையின் சில பகுதிகள் அதிவேகமாக செயல்படுவதன் காரணமாக கடுமையான தலைவலி ஏற்படுகிறது. தலைவலியின் போது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைந்து, கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன.
Headache Home Remedies in Tamil:தலைவலி என்பது ஒரு நரம்பியல் சார்ந்த பிரச்சனை. மூளையின் சில பகுதிகள் அதிவேகமாக செயல்படுவதன் காரணமாக கடுமையான தலைவலி ஏற்படுகிறது. தலைவலியின் போது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைந்து, கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன.
தலைவலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம், அதிக பதட்டம், சோர்வு, வேலை சுமை அல்லது ஏதேனும் கெட்ட பழக்கம் போன்று பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் தலைவலி தாங்க முடியாத நிலைக்கு சென்று விடும். அதற்கான வலி நிவாரணிகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதும் பக்க விளைவுகளை (Health Tips) ஏற்படுத்தும். இந்நிலையில், சில எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். இதனால், தலைவலி தீரும்.
மூலிகை டீ
இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்த பிளாக் டீ, தலைவலியை போக்க உதவும். அதோடு மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். கெமோமில் டீயும் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய சிறந்த கை வைத்தியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இஞ்சி மற்றும் துளசி டீயும் தலைவலியை போக்க உதவும்.
தேங்காய் மற்றும் கிராம்பு எண்ணெய்
10 கிராம் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 கிராம் கிராம்பு எண்ணெய் எடுத்துக் கொண்டு இரண்டையும் கலக்கவும். இதனை தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்தால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஒத்தட சிகிச்சை
தலைவலி நிவாரணம் அளிக்கு, கோல்ட் பேக்ஸ், அல்லது ஹாட் பேக்ஸ் என்னும் ஒத்தடங்கள் நிவாரணம் கிடைக்கும். ஒத்தடம் கொடுப்பது நரம்புகளை தளர்த்தி வலியில் இருந்து விடுபட உதவுவதாக சில மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகையால் தலைவலி ஏற்படும் சமயங்களில் தலையில் அல்லது கழுத்தின் பின்பகுதியில் கோல்ட் அல்லது ஹாட் பேக்குகளை பயன்படுத்தலாம்.
அனுலோம் - விலோம் பிராணாயாமம்
தலைவலியில் இருந்து விடுபட அனுலோம் - விலோம் பிராணாயாமம் மிகவும் பயனுள்ள யோகாசனம். இதனால் தலைவலி மட்டுமின்றி மன அழுத்தமும் நீங்கும். இந்த யோகாசனத்தை தினமும் சுமார் 15 நிமிடங்கள் செய்து வந்தால், பல நன்மைகளைப் பெறலாம்.
தலைவலி வராமல் தடுக்க செய்ய வேண்டியவை:
போதுமான தண்ணீர் அருந்துதல்
அதிக தண்ணீரை உட்கொள்வது ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையளிப்பதற்கான எளிதான வழியாகும். நீரிழப்பு ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்னீஷியம் சத்து நிறைந்த உணவுகள்
நரம்புகளை தளர்த்தி, இரத்த நாளங்களின் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மெக்னீசியம் சத்து அவசியம். தலைவலி ஏற்பட மெக்னீஷியம் குறைபாடும் ஒரு காரணம். இந்நிலையில், பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகள், கீரை, பருப்பு வகைகள், முழு தானியங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தல்
துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு தலைவலி ஏற்படும். இவற்றால் உடல் எடையும் கூடும்.
நல்ல தூக்கம்
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான எளிதான வழியாகும். தூக்கமின்மை தலைவலி பிரச்சனையை அதிகரிக்கும். தினமும் 7-8 மணிநேரம் நன்றாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கிராம்பு செய்யும் மேஜிக்... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க - அப்புறம் பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ