Skin Care Tips: உடனடியாக முகத்தை பொலிவாகும் ஒரு பொக்கிஷம்
Benefits Of Applying Ice On Face: வெயில் காலத்தில் ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்ப்பதால் ஏதேனும் சருமப் பிரச்சினைகள் ஏற்படுமா, என்ன மாதிரியான மாற்றங்கள் சருமத்தில் நிகழும் என்பதை இங்கே காண்போம்.
சுத்தமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற பலர் லையுயர்ந்த சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனாலும், பெரிய அளவில் பலன் பெறுவதில்லை. ஆனால் முகத்தில் ஐஸ் தடவுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், முகத்தில் ஐஸ் தடவுவது சரும பிரச்சனைகளை நீக்குவது மட்டுமின்றி வயதான அறிகுறிகளை குறைத்து பளபளப்பான சருமத்தை பெறவும் உதவுகிறது. இதற்கு முகத்தில் ஐஸ் தடவுவதற்கான சரியான வழியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே த்தில் ஐஸ் பூசுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
முகத்தில் ஐஸ் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
நீங்கள் இளமையாக தெரிவீர்கள்
முகத்தில் ஐஸ் தடவினால் முகம் இறுக்கமாக இருக்கும். இதன் காரணமாக, தோலின் விரிவாக்கப்பட்ட துளைகள் குறைந்து, சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளும் குறைவாகவே தெரியும் மற்றும் நீங்கள் இளமையாக தெரிவீர்கள்.
மேலும் படிக்க | Heart Health: இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள்
உடனடி பளபளப்பைப் பெறுவீர்கள்
முகத்தில் ஐஸ்கட்டியை தடவினால், சருமத்தில் இரத்த ஓட்டம் மேம்படும். இதனுடன், முகத்தின் சோர்வு நீங்கி, சருமத்தின் நிறம் மேம்படும், இதன் காரணமாக முகம் உடனடி பிரகாசத்தைப் பெறும். மேலும் சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு பளபளப்பாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.
முகத்தில் உள்ள எரிச்சல் மற்றும் சிவந்த தன்மையை நீக்கும்
வலுவான சூரிய ஒளி அல்லது மாசுபாட்டில் அதிக நேரம் செலவிடும்போது, அது தோல் எரிச்சலை ஏற்படுத்துகிறது மற்றும் தோல் சிவப்பாக மாறும். ஐஸ் தடவுவது தோல் எரிச்சலுக்கு நல்ல மருந்தாகும். ஐஸ்கட்டியைப் பயன்படுத்துவதால் சருமம் குளிர்ச்சியடைகிறது, இது சருமத்தின் சிவப்பிலிருந்து விடுபட உதவுகிறது.
முகப்பருவை குறைக்க உதவும்
முகத்தில் இருக்கும் எண்ணெயை சுத்தம் செய்ய ஐஸ் உதவுகிறது. விரிவாக்கப்பட்ட துளைகளை சுருக்குகிறது, இது முகப்பருவை குறைக்கிறது. தோலில் ஏற்கனவே இருக்கும் முகப்பருவின் வீக்கத்தையும் இது குறைக்க உதவும். இதனுடன், முகத்தில் புதிய முகப்பரு ஏற்படாமலும் இது தடுக்கிறது. குறிப்பாக கண்ணுக்குக் கீழே இருக்கும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
ஃபேஷியல் ஐசிங்
ஃபேஷியல் ஐசிங் செய்வதன் மூலம் சருமம் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும். ருமத்தைக் குளிர்விக்கும்போது, சருமத்தின் மேற்பரப்பை நோக்கி, ரத்தம் லே்நோக்கிப் பாய ஆரம்பிக்கும். இது சருமத்துக்கும் உடலுக்கும் நிறைய பயன்களைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ