மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியமான ஒன்று. ஆனால் தற்போது மாறி வரும் காலத்தால் தூங்கும் நேரமும் மாறுகிறது. தினமும் 7 முதல் 8 மணி நேரம்வரை தூக்கம் அவசியம் என மருத்துவர்கள் கூறினாலும் பலர் சரியாக தூங்குவதில்லை. இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூங்காமல் இருப்பதால் இதயத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு 10லிருந்து 10.59 மணிக்குள் தூங்கினால் இதயத்திற்கு சிறந்தது ஆகும். இந்த நேரத்தை ‘கோல்டன் ஹவர்ஸ்’ என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது தொடர்பான ஆய்வுக்கு 43 முதல் 79 வயதுக்குட்பட்ட 88 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர்.


அவர்களின் தூங்கும் நேரம், விழித்திருக்கும் நேரம் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அவர்களின் உடல் நலம், வாழ்க்கை முறை போன்ற விஷயங்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மாரடைப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்ட இதய நோய் சார்ந்த பிரச்சினைகள் இருக்கிறதா என்பதும் கண்காணிக்கப்பட்டது.



அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 3 விழுக்காடு பேருக்கு இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. நள்ளிரவிலோ, அதற்கு பிறகோ தூங்குபவர்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாவதும் கண்டறியப்பட்டது. நள்ளிரவில் அல்லது அதற்கு பிறகு தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 25 சதவீதம் அதிகம்.


மேலும் படிக்க | இந்த வைட்டமின் குறைப்பாடால் முடி வெள்ளையாக மாறுமாம்


அதேபோல், இரவு 10 மணிக்கு முன்பாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 24 சதவீதம் அதிகம்.


இரவு 11 மணி முதல் 11.59 மணிக்குள் தூங்குபவர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 12 சதவீதம் அதிகம் இருக்கிறது. எனவே, இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த படுக்கை நேரம் இரவு 10 மணி முதல் 10.59 மணி வரைக்கு உட்பட்ட காலகட்டம்தான் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள்.


மேலும் படிக்க | வெல்லத்துடன் கூட்டணி வைத்தால் உடல் எடையை குறைக்கும் உலர் திராட்சை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR