வாட்டி வதைக்கும் வாயுத்தொல்லைக்கு குட்பை சொல்ல உதவும் ‘சூப்பர்’ மசாலாக்கள்!
Home Remedies for Gas Problem Acidity: வயிற்றில் வாயு உருவாவது சாதாரண பிரச்சனை தானே என நினைக்கின்றனர். உங்கள் வயிற்றில் வாயு உருவானால், வயிற்றில் மட்டுமின்றி, பல இடங்களில் வலி தோன்றும்.
Home Remedies for Gas Problem Acidity: வயிற்றில் வாயு உருவாவதற்கு மிகப் பெரிய காரணம் நமது தவறான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை. வயிற்றில் வாயு உருவாவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பது பலருக்கு தெரிவதில்லை. அது சாதாரண பிரச்சனை தானே என நினைக்கின்றனர். உங்கள் வயிற்றில் வாயு உருவானால், வயிற்றில் மட்டுமின்றி, பல இடங்களில் வலி தோன்றும்.
வாயு காரணமாக, உங்களுக்கு கடுமையான தலைவலி ஏற்படலாம், அதிகப்படியான வாயு உருவானால், மார்பில் எரிச்சல் உணர்வு இருக்கலாம், அதன் பிறகு நீங்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் ஏற்படலாம். வாயு உருவாவதால், பாதிக்கப்பட்டவர்கள் வயிறு வீங்கத் தொடங்கி, செரிமானம் தொடர்பான பல வகையான பிரச்சினைகள் எழத் தொடங்குகின்றன.
உங்களுக்கும் அதிகப்படியான வாயு உற்பத்தி பிரச்சனை இருந்தால், அதனை எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இதனை அலட்சியம் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வாயு பிரச்சனை (Home Remedies for Gas Problem) தீர சில மசாலாக்களை உட்கொள்வது பலனளிக்கும். சமையலறையில் நிச்சயம் காணப்படும் சில மசாலாக்கள் வாயு பிரச்சனை மற்றும் வயிற்று வலியை குணப்படுத்துவதில் (Health Tips) மிகவும் திறன் பெற்றதாகும்.
வாயு பிரச்சனைக்கு குட்பை சொல்ல உதவும் சில மசாலாக்கள்:
பெருங்காயம்:
உணவிற்கு மணத்தையும் சுவையை கொடுக்கும் ஆற்றல் கொண்டது பெருங்காயம் (Asafoetida). அதுமட்டுமல்லாமல், வாயு பிரச்சனையை நீக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஒரு கிளாஸ் வெந்நீரில் பெருங்காயத்தை கலந்து குடிப்பது பலன் தரும். இவ்வாறு செய்வதன் மூலம் வாயு பிரச்சனையை பெருமளவு தீர்க்க முடியும். பெருங்காய நீரை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிப்பது நல்லது.
இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டை சாப்பிடுவதால் வாயு பிரச்சனை ஏற்படாது என்பதோடு, இது வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும் என்பதால், உடல் பருமன் குறையும். இதற்கு இலவங்கப்பட்டையை நன்றாக தட்டி, தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது நிவாரணம் அளிக்கும். இதில் தேனையும் சேர்த்து கொள்ளலாம்.
கருமிளகு:
சமையலறையில் இருக்கும் கருமிளகு வாயு பிரச்சனையையும் நீக்குகிறது. கருமிளகு சாப்பிடுவது வாயு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிற்றில் வாயுத்தொல்லை ஏற்பட்டால் கருமிளகு பொடி கலந்த பாலைக் குடிப்பது பலன் தரும்.
மேலும் படிக்க | சம்மரில் சுர்ருனு கோபம் வருதா... இந்த 6 விஷயங்களை செய்யுங்க் கூல் ஆகிவிடுங்க
ஓமம்:
ஓமம் வாயு தொல்லைகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் நிவாரணம் அளிக்கும் அற்புத மசாலா. ஓம விதைகளில் உள்ள தைமால் என்ற கலவை, செரிமானத்திற்கு உதவும் சாறுகளை வெளியிட இரைப்பையை தூண்டுகிறது. வாயுவால் ஏற்படும் தாங்க முடியாத வயிறு வலிக்கும் நிவாரணத்தை அளிக்கிறது. வாயு தொல்லையை சரி செய்ய தினமும் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு டீஸ்பூன் ஓமத்தை பொடி செய்து கொதிக்கவிட்ட நீரை அருந்தலாம்.
பூண்டு:
அல்லிசின் நிறைந்த பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது. இது வாயு பிரச்சனையை தீர்ப்பதோடு, கொல்ஸ்ட்ரால் உடல் பருமன் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. வயிற்றில் வாயு இருந்தால் சீரகம், கொத்தமல்லியுடன் பூண்டை வேகவைத்து சாப்பிடலாம். தினமும் இரண்டு முறை இதனை உட்கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் வாயு பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ‘இதை’ செய்யுங்கள்-வெயில் காலத்தில் வியர்வை நாற்றத்திற்கு பை-பை சொல்லுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ