முளை கட்டிய கோதுமை தோசை... எவ்வளவு குண்டாக இருந்தாலும் ஒல்லியாகலாம்..!
முளை கட்டிய கோதுமை : கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தோசை ஆகியவற்றை நிச்சயம் சாப்பிட்டிருக்க கூடும், ஆனால் முளை கட்டிய கோதுமை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்காது.
பொதுவாகவே எந்த ஒரு தானியமாக இருந்தாலும் அதை அப்படியே பயன்படுத்துவதை விட சிறிது முளை கட்டிய பிறகு பயன்படுத்தினால் அதிக சத்துக்கள் நமக்கு கிடைக்கும். சாதாரணமாகவே கோதுமை தோசை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாகக் குறைந்து விடும். அப்படியிருக்க முளைகட்டிய கோதுமை தோசை என்ரால் பலன் பன்மடங்காகும். குறிப்பாக உடல் எடையை குறைப்பதில் வியக்கத் தக்க பலன்களை தரும். அதோடு எலும்புகளையும் வலுவாக்கும்.
முளை கட்டிய கோதுமை தயாரிக்கும் முறை
முதலில் தேவையான அளவிற்கு கோதுமையை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை தண்ணீர் ஊற்றி ஒரு முறை அல்லது இரு முறை கழுவி விட்டு பின்னர் மீண்டும் கோதுமை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் இரவே ஊற வைக்க வேண்டும். அப்பொழுது தான் மறுநாள் காலை வரை நன்கு ஊறி இருக்கும். காலையில் எழுந்து கோதுமையில் இருக்கும் தண்ணீரை வடிகட்டிவிட்டு கோதுமையை மட்டும் ஒரு காட்டன் வெள்ளை துணியில் போட்டு கட்டி வைத்து விட வேண்டும். எட்டு மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் எடுத்து பார்த்தால் அது முளை கட்டி இருக்கும். ஒருமுறை கோதுமையை முளைகட்ட செய்து ப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் போதும். ஒரு வாரம் வரை அது கெட்டுப் போகாது அப்படியே ப்ரஷ்ஷாக இருக்கும். தேவையான பொழுது எடுத்து தோசை செய்து சாப்பிடலாம்.
கோதுமையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கோதுமையில் பல விதமான ஊட்டசத்துக்கள் காணப்படுகின்றன, அவை நம் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தோசை ஆகியவற்றை நிச்சயம் சாப்பிட்டிருக்க கூடும், ஆனால் முளை கட்டிய கோதுமை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்காது. ஆனால், அதன் வியக்கத் தக்க பலன்களை அறிந்து கொண்டால், இன்றே பயன்படுத்த தொடங்கி விடுவீர்கள். அரிசிக்கு பதிலாக அல்லது அறிசி அளவை குறைத்து கொண்டு, அதற்கு பதிலாக முளை கட்டிய கோதுமையை சேர்த்து தோசை மாவு தயாரித்து சாப்பிட எவ்வளவு குண்டாக இருப்பவர்களும், சற்று ஒல்லியாக விடுவார்கள். ஆனால், இதனை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!
முளை கட்டிய கோதுமையின் நன்மைகள்
1. உடல் பருமன் குறைய
உடல் எடை அதிகரிப்பது என்பது இப்போது பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டது. இன்றைய உணவு பழக்கம் வாழ்க்கை முறை இதுவே முதல் காரணம். அதோடு, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு, பின்னர் வீட்டில் இருந்து வேலை செய்வதால், மக்களின் உடல் செயல்பாடுகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கிறதே, தவிர, குறைப்பது என்பது சவாலான காரியம் ஆகி விட்டது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முளை கட்டிய கோதுமையை உட்கொள்ளலாம். காலை உணவில் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் ஆற்றல் நாள் முழுவதும் குறையாமல் அப்படியே இருக்கும். நீண்ட நேரம் பசி எடுக்காது, அத்தகைய சூழ்நிலையில், அதிகமாக சாப்பிட்டாமல் இருக்கும் சூழ்நிலை உருவாகி, படிப்படியாக எடை குறையத் தொடங்குகிறது.
2. செரிமானம் சிறப்பாக இருக்கும்
எப்பொழுதும் வயிறு உபாதைகள் இருப்பதாக புகார் கூறுபவர்கள் முளை கட்டிய கோதுமையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு மற்றும் செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது.
3. எலும்புகள் வலுவாக இருக்கும்
வயது ஏற ஏற, எலும்புகள் முன்பு போல் வலுவில்லாமல், படிப்படியாக உடலில் பலவீனம் வர ஆரம்பிக்கிறது, இதை தவிர்க்க, காலையில் எழுந்ததும், முளை கட்டிய கோதுமையை சாப்பிட வேண்டும், ஏனெனில், எலும்புகளுக்கு அபாரமான பலம் கிடைக்கும். ஏனெனில் இதில் கால்சியம் அதிகம் உள்ளது.எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான அளவு கால்ஷியம் இதில் காணப்படுகிறது.
மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ