அதிக அளவிளான உடன்பிறப்புகளை கொண்டிருப்பவர்களுக்கு புற்றுநோய் வராது என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடன்பிறப்புகள், அத்தை, மாமாக்கள் என அதிக எண்ணிக்கையிலான உறவு பட்டாளங்களை கொண்டுள்ள குடும்பத்தாருக்கு புற்றநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்த் பேராசிரியர் இருவர் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது. 


இந்த ஆய்வினை மேற்கொண்ட பரிணாம மருத்துவம் பேராசிரியர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில்... கிடைக்கப்பெற்ற ஆய்வின் முடிவினை நிறுபிக்க பல்வேறு சாத்தியகூறுகள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளது. மேலும் உணர்வுபூர்வமான சுற்றுச்சூழல் பெரிய குடும்பங்களில் உருவாக்குவதால் நோய் அபாயத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என நம்புகிறோம், என தெரிவித்துள்ளனர்.


ஜூரிச் பல்கலைக்கழகத்தின் பரிணாம மருத்துவ பிரிவு இயக்குனர் பேராசிரியர் பிராங் ருஹிலி இதுகுறித்து தெரிவிக்கையில்... "ஒரு பரிணாம முன்னோக்கு பாதையில், புற்று நோயானது மிகவும் விசித்திரமான நோயாகும், ஏனென்றால் அது நிகழ்வுகளில் அடிப்படையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இதுதொடர்பாக ஆராய்ச்சியில் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த குழு ஆனது 178 நாடுகளின் புற்றுநோய் விகிதங்கள், புற்றுநோய்களின் வகைகள், கருவுறுதல் வீதங்கள், வீட்டுப் பருவம், ஆயுட்காலம், செல்வம் மற்றும் உயிரியல் நிலை குறியீட்டெண் (இது எவ்வாறு அவர்கள் இனப்பெருக்கம் செய்யப்படலாம் என மதிப்பிடுவது) பற்றிய ஐ.நா கருத்துகணிப்பு கணக்கீடுகளை தொகுத்து ஆய்வின் அறிக்கையினை வழங்கியுள்ளனர்.


தொகுக்கப்பட்ட தகவல்களின் மூலம் சராசரி குடும்ப அளவைக் கண்டறிந்து, அந்த புள்ளிவிவரங்கள், புற்றுநோய் விகித தரவுடன் ஒரு வரைபடத்தில் வைக்கப்பட்டடு சுயாதீனமான ஒரு தெளிவான வழிமுறையை உருவாக்கப்பட்டது. இந்த வழிமுறையின் மூலம்.,


அதிக குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெண்களுக்கு புற்றுநோய் என்ற விகிதம் குறைந்தளவில் தென்பட்டது. மூளை, சிறுநீர்ப்பை, நுரையீரல், வயிறு, மார்பகம், கருப்பைகள், பெருங்குடல் மற்றும் மலக்குடல், கருப்பை வாய் மற்றும் மெலனோமா உள்ளிட்ட புற்றுநோய்களின் ஆபத்துகள் பெரிய குடும்பங்களில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


பெண்களை பொருத்தமட்டில் இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்திவிட போவதில்லை., காரணம் பல முறை கருவுற்றலினால் பல வித புற்றுநோய்களில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருந்தாலும், மார்பக புற்றுநோயால் அவர்கள் பாதிக்க வழியுண்டு.


இந்த தகவல்களின் படி பெரிய குடும்பத்தில் வசிக்கும் நபர்கள் புற்றுநோய் தாக்கத்தின் பாதிப்பில் இருந்து விடைப்பெறலாம் என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. இது குடும்பத்தின் உணர்ச்சி அம்சத்தை வலியுறுத்துகின்ற காரணத்தின் ஒரு பகுதியாகும் என டாக்டர் ருஹிலி தனது ஆய்வு கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.