கற்கண்டு சாப்பிட மட்டுமல்ல ‘கண் பார்வைக்கும்’ இனிப்பானது!

கற்கண்டு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளிலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் கற்கண்டை கட்டாயம் பார்க்கலாம். வாசலிலேயே கல்கண்டு வைத்துக் கொண்டு வரவேற்கும் பழக்கம் உள்ளது.
கற்கண்டு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளிலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் கற்கண்டை கட்டாயம் பார்க்கலாம். வாசலிலேயே கல்கண்டு வைத்துக் கொண்டு வரவேற்கும் பழக்கம் உள்ளது. வரவேற்பு வைபவங்களில் நிறைபெறும் கல்கண்டின் நன்மைகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். கோயில்களில் கல்கண்டு பிரசாதம் கொடுக்கும் வழக்கம்மும் உள்ளது.
பொதுவாக கற்கண்டு இனிப்பான பொருள் என்பதால், பலர் சாப்பிட்டாமல் ஒதுக்கி விடும் பலரை பார்க்கலாம். ஆனால் கற்கண்டு நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். கண்பார்வை அதிகரிப்பதில் இருந்து சளி, இருமலை குணப்படுத்தும் அருமருந்தாக இருக்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா...
ஆனால், இதன் நன்மைகளை அறிந்த பலர் சர்க்கரைக்குப் பதிலாக கற்கண்டை பயன்படுத்துகிறார்கள். இது மட்டுமின்றி, கற்கண்டை தினசரி வாய் புத்துணர்ச்சியாக வைக்கவும் மவுத் பிரெஷ்னராக பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் மற்ற பலன்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!
கற்கண்டில் புதைந்துள்ள நன்மைகள்
1. கற்கண்டு கண்களுக்கு நல்லது. எனவே உங்கள் கண் பார்வை பலவீனமாக இருந்தால், நீங்கள் தினமும் கற்கண்டை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
2. இது தவிர, நீங்கள் உடல் சோர்வு அதிகம் இருப்பதாக உணர்ந்தால், கற்கண்டை சாப்பிடுவதால் சோர்வு நீங்கும். கற்கண்டை சாப்பிடுவது ஆண்களின் விந்தணுவை மேம்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
3. மேலும், கற்கண்டு சாப்பிடுவதால், இரத்தத்தில் அமில அளவு சரியாக இருக்கும். வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனையை நீக்கவும் கற்கண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
4. கொரோனா காலத்தில், (Corona Virus) சளி, இருமல் இருந்தால், தினமும் கற்கண்டு சாப்பிடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். ஆரோக்கியம் நிறைந்த கற்கண்டை ஆயுர்வேத மருத்துவத்திலும் கடைபிடிக்கின்றனர் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் போது அவர்களை அழவைத்து கசப்பு மருந்தை கொடுப்பதை விட, இந்த இனிப்பான கற்கண்டை குடுத்தால் சந்தோஷமாக சாப்பிடுவார்கள். சளி மற்றும் இருமலும் உடனே சரியாகிவிடும். கண்பார்வை அதிகரிப்பது முதல் சளி மற்றும் இருமல் வரை பல விஷயங்களில் ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய கற்கண்டை நீங்களும் தினமும் எடுத்து கொண்ட நன்மை பெறலாம்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR