உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது Saridon!
சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகளை தற்போதைக்கு விற்பனை செய்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது!
சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகளை தற்போதைக்கு விற்பனை செய்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது!
வலி நிவாரணி என்னும் பெயரில் விற்கப்படும் மாத்திரைகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவத்து சாரிடான் உள்ளிட்ட 328 மாத்திரைகளை தடை செய்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் கடந்த வாரம் உத்தரவு பிரப்பித்தது.
இந்த உத்தரவின்படி பான்டர்ம் ( Panderm), குளுக்கோநார்ம் (Gluconorm), லூபிடிக்ளாக்ஸ் (Lupidiclox), டாக்சிம் ஏஇசட் (Toxim AZ), சாரிடான் போன்ற மருந்துள் உள்பட பல பிரபல மருந்துக்களை விற்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2016-ஆம் ஆண்டு 349 மருந்து பொருட்கள் உட்கொள்ள தகுதியற்றவை என கூறி மத்திய அரசு அவற்றின் பயன்பாட்டுக்கு தடை விதித்தது. இதனையடுத்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், 2017 ஆம் ஆண்டு, மருந்துகள் குறித்த ஆலோசனை குழுவான டிடிஏபி (DTAB)-விற்கு இது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின்படி மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகம் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்ட 328 மருந்துகளில் வேதி பொருட்களின் சேர்க்கை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், இவைகள் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே மத்திய சுகாதார துறை அமைச்சகம் 328 மாத்திரைகளுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், இன்று இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகளை இப்போதைக்கு விற்றுக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது!