Diabetes Early Signs: நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியை எவ்வாறு கண்டறிவது என்பது தெரிந்தால் பிரச்சனையை எளிதாக கையால முடியும். எனவே, சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளை தெரிந்துக் கொண்டு, உடனடியாக அதில் கவனம் செலுத்துங்கள். இவை நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருந்தாலும், இவை மட்டுமே நீரிழிவு நோய் ஏற்பட்டது என்பதற்கான உறுதியான அறிகுறிகள் கிடையாது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அறிகுறிகள் மூலம் அடையாளம் கண்டுக் கொண்டால், சர்க்கரை அளவு அதிகரிப்பதையும், சர்க்கரை நோய் வருவதையும் தவிர்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரிழிவு நோய் ஒரே இரவில் ஏற்படாது, அது ஒரு அமைதியான கொலையாளி போல மெதுவாக உடலில் நுழைகிறது. அதன் அறிகுறிகள் உடலில் தெரியும், ஆனால் மிக விரைவில் தெரிந்துவிடுவதில்லை. கணையத்தால் உடலில் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியாமல் போனால், உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, நீரிழிவு நோயால் பாதிப்பு ஏற்படுகிறது.


உடல், இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாதபோது, ​​இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது, இது நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாகிறது. ப்ரீடயாபெட்டிக் இருப்பதற்கான அறிகுறிகளைத் தொடர்ந்து நமது உடல் நமக்கு கொடுத்து வருகிறது. ஆனால் கவனம் செலுத்தவில்லை என்றால், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.  


மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா... உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ‘முக்கிய’ உணவுகள்! 


இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
அதேசமயம், பகலில் கூட சிறுநீர் அடிக்கடி வந்தால், அது கவலைக்குரிய விஷயம், ஆனால் இரவில் மீண்டும் மீண்டும் சிறுநீர் வந்தால், உடனடியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதன் பொருள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையை வடிகட்ட முயற்சிக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். 


தாகம்
அதிகப்படியான சிறுநீர் வெளியேறுவதால், உடலில் நீர் பற்றாக்குறையால், அதிக தாகம் ஏற்படுகிறது, இதன் காரணமாக மீண்டும் மீண்டும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதிக தாகம் எடுத்தால், அது நீரிழிவு வகை 2 இன் அறிகுறியாகும்.


பசி
நீரிழிவு நோயில் இன்சுலின் அல்லது குளுக்கோஸ் குறைபாடு அல்லது எதிர்ப்பு காரணமாக, உண்ணும் உணவை ஆற்றலாக மாற்ற உடலால் முடியாது, இதன் காரணமாக நாம் அடிக்கடி பசி உணர்வு ஏற்படும்.  


மேலும் படிக்க | Oats For Weight Loss: உடல் எடையை குறைக்க ஓட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? 


எடை இழப்பு
உடல் எடை திடீரென குறைவது, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கலாம்.


பலவீனம், சோர்வு
டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள், காலை முதல் இரவு வரை சுறுசுறுப்பாக பணியாற்ற  முடியாமல் சோர்வுடன் பலவீனமாக உணர்ந்தால், அது நீரிழிவுக்கான அறிகுறியாக இருக்கலாம்.


பார்வைக் குறைபாடு, எந்தக் காயமும் விரைவில் ஆறாமல் இருப்பதும் நீரிழிவு நோய் இருந்தால் ஏற்படும் அறிகுறியாகும். கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு, உணர்வின்மை, கால்கள் மற்றும் கைகளில் எரியும் உணர்வு ஏற்படுகிறது. கழுத்து, இடுப்பு மற்றும் முகத்தில் கருப்பு புள்ளிகள் தோன்றும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குச்சிக் கிழங்கை இப்படி சாப்பிட்டு பாருங்க! ஒல்லிக் குச்சி உடம்பு கேரண்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ