உங்களுக்கு உடம்பு வலியா?: உங்களுக்கு புடிச்சவங்க கைய பிடிங்க போதும்!!
நாம் மிகுந்த வலியை அனுபவிக்கும் போது நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை தொடுவதால் வலி குறையும் என ஆய்வில் புதிய தகவல்!!
பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் வலி. பொதுவாக இந்த உடல் வலியானது ஒருசில கடுமையான எடை கொண்ட பொருட்களை நீண்ட நேரம் தூக்குவதாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொள்வதாலோ சந்திக்க நேரிடும். ஆனால், சில நேரங்களில் இந்த உடல் வலி சில நோய்களுக்கான அறிகுறியாகவும் உள்ளது.
தலை வலி, முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, தசை வலி போன்றவை பொதுவானவை. மற்றொரு வித்தியாசமான வலி தான் நரம்புகளில் ஏற்படக்கூடிய வலி. இந்த வலியானது நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகள் பலவீனமடையும் போது ஏற்படும். இதற்கு நரம்புநோய் வலி (Neuropathic Pain) என்று பெயர்.
நம்மில் பலர் உடல் வலியை தாங்கமுடியாமல் உடனே மருத்துவமனைக்கு செய்வது உண்டு. இனி அந்த பழக்கத்தை கைவிடுங்கள். மருந்து மாத்திரை இல்லாமலே இனி எளிமையாக உடல் வலியை குறைக்கலாம். உங்களுக்கு நெருக்கமானர்களின் கையை பிடித்தாலே பொதும். எப்படி என்று பார்கின்றீர்களா?.
சமீபத்தில் கொலராடோ பல்கலைக்கழகத்தின் நடத்தப்பட்ட ஆராயச்சியின் முடிவில் இந்த முறை தெரியவந்துள்ளது. தனிமனித ஒத்திசைவு பற்றி வளர்ந்து வரும் ஆய்வை இது நடத்தியுள்ளது. துணைவரின் குணாதிசயங்கள் மற்றும் உடற்கூறியல் செயல்பாடுகள் போன்றவற்றின் கோட்பாடுகளைப் பற்றி இந்த ஆய்வு முழுமையாக கூறுகிறது.
இதுப்பற்றி "நவீன உலகில் தொடர்பு கொள்ள நிறைய வழிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம், எங்களிடம் குறைவான உடல் தொடர்புகளும் உள்ளன," என்று பல்கலைக்கழகத்தில் அறிவாற்றல் மற்றும் பாதிப்புள்ள நரம்பியல் ஆய்வகத்தின் பிந்தைய துடிப்பு வலி ஆராய்ச்சியாளர் பாவெல் கோல்ட்ஸ்டைன் கூறினார். மேலும் அவர் "இந்த முறையானது மனித உறவுகளின் சக்தி மற்றும் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
குறிப்பாக, கோல்ட்ஸ்டைனின் ஆய்வில் கைகளை கோர்ப்பதால் உங்கள் மூச்சு முறைகள், இதய துடிப்பு மற்றும் மூளை அலைகள் ஆகியவற்றை ஒத்திசைக்கும் என்று கண்டறிந்துள்ளனர். மூளையின் ஒத்திசைவைப் பற்றி அறியக்கூடிய முதல் ஆய்வு இது தான். தொடுதல் மூலம் வலி எப்படி குறைக்கப்படுகிறது என்பதற்கான முதல் ஆய்வும் இது தான்.
பிரசவத்தில் அவருடைய மனைவியுடன் தங்கியிருந்த பிறகு கோல்ட்ஸ்டீன் இந்த பரிசோதனையை பற்றி ஆராய துவங்கியுள்ளார். பிரசவத்தின் போது இவருடைய மனைவி வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இவர் தன் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது இவருடைய மனைவிக்கு வலி குறைந்து மிகவும் எளிமையாக உணர்வதை உணர்ந்துள்ளார்.
இதில் உண்மை உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் இவருக்கு அதிகரித்துள்ளது. இந்த ஆய்விற்காக சுமார், 22 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் மூளையின் செயலாற்றலைக் கணக்கிட EEG கப்ஸ் பொருத்தப்பட்டது. அந்த ஜோடிகள் தனி அறையில் இருக்கும் போதும், ஒரே அறையில் தொடாமல் இருக்கும் போதும், கை கோர்த்து இருக்கும் போதும் அவர்களின் மூளையின் செயலாற்றல் கணக்கிடப்பட்டது. பெண்கள் மிகுந்த வழியை அனுபவிக்கும் போது ஆண்களின் தொடுதலால் குறைகிறது என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
கோல்ட்ச்டீன் மற்றும் அவரின் குழுவானது தொடுதல் உணர்வு, பகிரும் அனுபவத்தை தருவதாகவும், இதனால் வலியும் இருவருக்கும் பகிரப்படுவதாகவும் கூறுகின்றனர். இதனை புரியும் படி கூறினால், உங்கள் துணையின் தொடுதலை நீங்கள் உணர்வதால், வலியின் தாக்கம் உங்கள் உடலில் குறைந்து, நீங்கள் தனியாக இல்லை என்ற உணர்வை உங்கள் உடல் உணர்கிறது. உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இடையில் உள்ள தூரத்தை இந்த தொடுதல் உணர்வு குறைக்கிறது என்று கூறுகிறார்.