பங்களாதேஷை சேர்ந்த 40 வயதுடைய பெண்மணி ஒருவரின் காலின் எடை மட்டும் 60 கிலோவை தாண்டியது. இவர் யானைக்கால் நோயால் பதிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர் ரெஜியா பேகம் எனவும், 18 ஆண்டுகளுக்கு முன்பு தனது இரண்டாவது மகள் பிறப்பினை தொடர்ந்து அதுமுதல் இந்த நோயாள பாதிக்கப்பட்டுள்ளார்.


ரெஜியா பேகமின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதில் அவர் தெளிவாக இல்லை என்றாலும், அவளுடைய உறவினர்கள் இவரை ஒதுக்கி வைத்திருப்பது மனஉளைச்சலை தருவதாக கூறுகிறார்.


தற்போது இவர் பங்களாதேஷில் டாக்கா மருத்துவ கல்லூரி அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் இவருக்கான சிகிச்சையை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.


கொசுக்கள் மூலமும், மண்புழுக்கள் மூலமும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிகின்றனர். மேலும் இவரது வீக்கம் காலில் இருந்து அடிவயிறு வரை பரவி இருந்தால், இந்த நிலையில் ரஜியாவின் உயிரை காப்பது கடினம் எனவும் தெரிவித்துள்ளனர்.