உயர் இரத்த அழுத்தம் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். அதேபோல் இன்றைய அதிவேக உலகில் பலர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் இரத்த நாளங்களில் இரத்தத்தின் இயல்பான வேகமானது அசாதாரணமான அளவில் அதிகரிக்கும் ஒரு நிலை ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் விளைவாக, உங்கள் இரத்த நாளங்களின் சுவர்கள் பலவீனமடைந்து, உங்கள் இதயம் வழக்கமான விகிதத்தை விட அதிகமாக பம்ப் செய்யத் தொடங்குகிறது. இந்த வேகமான பம்பிங் உங்கள் இதயத்தை அதிகமாக உழைக்க வைப்பதால் மாரடைப்பு மற்றும் பிற மாரடைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் விலகி இருக்க வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.


மேலும் படிக்க | சர்க்கரை கொல்லியாக நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சிறுகுறிஞ்சான்!


உயர் இரத்த அழுத்தத்திற்கான முக்கிய காரணங்கள்
- உடல் பருமன்
- புகைபிடித்தல்
- மது அருந்துவது
- சமநிலையற்ற உணவு
- தூக்கம் இன்மை
- மனச்சோர்வு
- உடல் செயல்பாடு குறைதல்


இரத்த அழுத்த அளவுகள்
உடலின் எல்லா பாகங்களும் இதயம் இரத்தத்தை பம்ப் செய்யும் போது இரத்த அழுத்தம் உண்டாகிறது. இரத்த அழுத்தம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. காலையில் குறைவாகவும் மாலையில் அதிகமாகவும் இருக்கும். உறங்கும் போது குறைவாக இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போதும் கோபதாபங்களின் போதும் இரத்த அழுத்தம் தற்காலிகமாக அதிகரிக்கும்.


மேலும் படிக்க | இந்த வகை உணவுகள் சர்க்கரை நோய் அளவை கட்டுப்படுத்த உதவும் 


உயர் இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க இந்த பழக்கங்களை இன்றே கைவிடுங்கள்
உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். எனவே உயர் இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.


1. அதிகப்படியான உப்பு உட்கொள்வதை தவிர்க்கவும்
2. அதிக கொழுப்புள்ள உணவை உட்கொள்வதை தவிர்க்கவும்
3. மது அருந்துவது கேடு
4. கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்கவும்
5. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR