நீங்கள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் மக்களின் ஆரோக்கியம் மோசமடையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், பல வகையான நோய்கள் உங்களைச் சுற்றி வரத் தொடங்கும். இதில் கொலஸ்ட்ரால் குறைவதும் ஒரு பெரிய பிரச்சனையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில் 2 வகையான கொலஸ்ட்ரால் உள்ளது
உங்கள் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. முதலில் நல்ல கொலஸ்ட்ரால் இரண்டாவது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க ஆரம்பித்தால், மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கொலஸ்ட்ராலை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். எனவே சில உலர் பழங்கள் உள்ளது அவை உங்கள் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அவை எவை என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளலாம். 


மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!


கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க, முந்திரியை உட்கொள்ளுங்கள்
முந்திரி பருப்புகளை உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். முந்திரியை உட்கொண்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். முந்திரி பருப்பில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதில் நல்ல அளவு புரதம் இருக்கிறது. இதனால் முந்திரியை உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.


1. வால்நட்ஸ்
வால்நட்ஸ் பருப்புகள் அதிகரித்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். இது ஒரு உலர் பழம் ஆகும், இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். வால்நட்ஸ் பருப்பில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன.


2. பாதாம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
ஃபிட்டாக இருக்க தினமும் பாதாம் சாப்பிடுவது நல்லது. பாதாமில் அமினோ அமிலங்கள் உள்ளன, அவை உடலில் நைட்ரிக் ஆக்சைடை உருவாக்குகின்றன. பாதாம் பருப்பை தினமும் உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் விரைவில் குறைகிறது.


3. பிஸ்தாவை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
நீங்கள் தினமும் பிஸ்தா சாப்பிட்டால் எனனெற்ற நன்மைகளை பெறலாம். தினமும் சிறிதளவு பிஸ்தா சாப்பிடுவது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.


4. விதைகளும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
உடலில் இருந்து கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் விதைகள் நன்மை பயக்கும். விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR