இந்திய உணவின் சுவை சுத்தமான பசு நெய் என்று கூறலாம். நெய்யில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. சித்த மருத்தவத்திலும், ஆயூர்வேதப்புத்தங்களிலும் காணலாம், வேதங்களிலும் நெய் பயன்படுத்த வரலாற்றை நாம் அறிவோம். அந்தவகையில் நெய்யில் உள்ள நன்மைகள் விபரம் இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுத்தமான பசு நெய்யின் நன்மைகள்
- பசுவின் நெயை மூக்கில் போடுவதன் மூலம் ஒவ்வாமை நீங்கும்.
-டைப் 2 நீரிழிவு தேசி நெய்யை விலக்கி வைக்கிறது-
பசு நெய்  நன்மைகள் (Cow ghee benefits) உடல் பருமனுடன், டைப் 2 நீரிழிவு (Type 2 diabetes) நோயை விலக்கி வைக்கிறது.


 


ALSO READ | கர்ப்ப காலத்தில் பசு நெய் சாபிடுவது நல்லதா?... கேட்டதா?....
-சுத்தமான பசு நெய்யில் வைட்டமின் கே (Vitamin k) உள்ளது. கூடுதலாக, இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகின்றன.
-சுத்தமான
பசு நெய்யை உணவில் சேர்ப்பது எடையை அதிகரிக்காது, ஆனால் அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
-நெய்யில் நல்ல கொழுப்பு இருப்பதால் எளிமையாக ஜீரணம் தன்மை ஆகும். இதனால் பேலியோ, கெட்டோஜெனிக் போன்ற உணவு முறைகளில்
பசு நெய் பரிந்துரைப்படுகிறது,. அதிக பசியோடு இருக்கும் நேரத்தில் பாலுடன் சிறிது நெய் சேர்த்து உண்டால் பசி ஆறும்.
-செரிமானத்திற்கு நெய் உதவுகிறது. ஆகவே குழந்தைகளுக்கு நெய் அன்னம் அளித்துவருவது நம் பண்பாட்டில் இருந்து வருகிறது.
-சமையலில் வறுத்தலுக்கு நெய்யின் துணையோடு பதப்படுத்தினால் நீண்ட நேரம் கெடமால் உணவுப்பொருட்களை பாதுக்காக்கலாம்
- கைகளிலும் கால்களிலும் எரியும் உணர்வு இருந்தால், பசுவின் நெய்யை உள்ளங்காலில் மசாஜ் செய்தால், எரியும் உணர்வு குணமாகும்.


 


ALSO READ | என்னாது நெய்க்கு, இவ்வளவு பவர் இருக்கா?
-பசு நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன. அதில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம்.