பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படும் சிறுநீர் பாதை தொற்று நோய்க்கு காரணங்கள், தொற்றில் இருந்து தப்பிப்பது எவ்வாறு என்பது குறித்த ஒரு பதிவு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மழை மற்றும் கோடை நாட்களில், தொற்றுநோய் பிரச்சினைகள் ஏற்படுவது பொதுவானது. இந்த பருவ காலங்களில் பெண்களுக்கு UTI அதாவது சிறுநீர் பாதை நோய்த்தொற்று பிரச்சினைகள் ஏற்படுவது அதிக அளவில் காணப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. 


சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் அபாயத்திற்கு முக்கிய காரணம் சுத்தம் இல்லாத இடத்தில் கழிப்பறையைப் பயன்படுத்து என கூறப்படுகிறது. ஒரு வகையில் இதுவும் உண்மை தான்.  இதன் காரணமாக தான் பெண்கள் சிறுநீர் பாதை தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள்.  எனவே இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க, நாம் ஒவ்வொரு வகையிலும் கவனம் செலுத்த வேண்டும். 


இதுபோன்ற பிரச்சினை தவிர்க்க, அதிக தண்ணீர் குடிப்பது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தண்ணீர் மட்டும் தீர்வு ஆகி விடுமா?... இந்த பிரச்சினைகளில் இருந்து மீள, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் பின்பற்றுதல் அவசியம் ஆகும். உங்கள் கவனத்திற்கு...


சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்பட சாத்தியகூறுகள்...


  • நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருத்தல்.

  • குறைந்தளவு திரவ உணவு உட்கொள்ளுதல்.

  • அதிக அளவு காபி மற்றும் ஆல்கஹால் எடுத்துக்கொள்ளுதல்.

  • நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதை நிறுத்துதள்.

  • மாதவிடாய் காலத்தில் தூய்மையை புறக்கணித்தல்.

  • சிறுநீர் கழித்த பிறகு, அந்தரங்க பகுதியை சுத்தம் செய்யாமல் இருத்தல்.

  • மாதவிடாய் காலத்தில் ஒரே திண்டை நீண்ட காலம் பயன்படுத்துதல்.


சிறுநீர் பாதை நோய்த்தொற்று அறிகுறிகள்...


  • அடிக்கடி கழிப்பறைக்குச் செல்வது

  • சிறுநீர் கழிக்கையில் அந்தரங்க உறுப்பில் எரியும் மற்றும் மணம்

  • சிறுநீரின் நிறத்தில் மாற்றம்

  • மலத்தை கழிக்கும் போதும் வலி

  • எப்போதாவது மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்

  • கடுமையான அடி வயிற்று வலி

  • சளி மற்றும் அதிக காய்ச்சல்

  • கடுமையான முதுகுவலி

  • சோர்வு மற்றும் தலைச்சுற்றல், போன்றவை சிறுநீர் பாதை நோய்த்தொற்று அறிகுறிகளாக கூறப்படுகிறது.