இந்த பிரச்சனைகள் இருக்கா... அப்ப கரும்பு ஜூஸுக்கு `NO` சொல்லுங்க!

Sugarcane Juice Disadvantage : கரும்பு சாற்றில் பலவித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. ஆனால் இந்த ஆரோக்கியமான பானம் சிலருக்கு நன்மை தருவதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Disadvantages of drinking sugarcane juice: கோடை வெயில் இருந்து நிவாரணம் பெற, நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்கு நாம் சில பானங்களை குடித்து வருவோம். அதில் ஒன்று தான் கரும்புச்சாறு (Sugarcane Juice). கோடை காலத்தில் கரும்புச்சாறை மக்கள் அதிகம் விரும்பி குடிப்பார்கள். அதனுடன் இந்த கரும்பு சாற்றில் கால்சியம், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல கூறுகள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இந்த ஆரோக்கியமான பானம் உங்களுக்கு நன்மைக்கு செய்வதற்கு பதிலாக் தீங்கு விளைவிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சில நபர் இந்த பானத்தை குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எனவே எந்தெந்த நபர்கள் இந்த சாற்றை குடிக்க கூடாதி என்பதை தெரிந்துக்கொள்வோம்.
செரிமானம் பிரச்சனை உள்ளவர்கள்:
செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளவர்கள் மறந்து கூட கரும்புச்சாறை உட்கொள்ளக்கூடாது. கரும்பு சாற்றில் காணப்படும் பாலிகோசனால் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடலாம். இதனால் வயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள்:
கரும்புச்சாற்றில் இயற்கையான சர்க்கரை உள்ளது. 240 மில்லி கரும்பு சாற்றில் சுமார் 50 கிராம் சர்க்கரை உள்ளது, இது 12 தேக்கரண்டிக்கு சமமாகும். இதன் கிளைசெமிக் இண்டெக்ஸும் குறைவு. ஆனால் கிளைசெமிக் சுமை அதிகமாக உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் கரும்பு சாற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
தலைவலி மற்றும் சளி உள்ளவர்கள்:
கரும்புச்சாறு குடிப்பதால் தலைவலி, சளி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடலாம். ஏனெனில் கரும்பு சாறு குளிர்ச்சி தன்மை கொண்டது. இதனுடன், தலைவலியை ஏற்படுத்தும் பாலிகோசனால் இதில் காணப்படுகிறது.
தூக்கமின்மை பிரச்சனை:
கரும்புச் சாற்றில் காணப்படும் பாலிகோசனால் தூக்கமின்மையை ஏற்படுத்தும். உங்களுக்கு நீங்கள் மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் கட்டாயம் கரும்புச்சாறை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்:
உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் கரும்பு சாறு குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது நல்ல கொலஸ்ட்ராலை கெட்ட கொலஸ்ட்ராலுடன் இணைத்தவிடும். எனவே கரும்புச் சாறு குடித்தால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கலாம்.
கரும்பு ஜூஸ் vs ICMR எச்சரிக்கை:
இதற்கிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் (ICMR - Indian Council of Medical Research) மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி அளவுக்கு அதிகமாக கரும்பு ஜூஸ் அருந்தும்பொழுது அதில் உள்ள அதீத சர்க்கரை அளவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆரோக்யமான உணவு முறை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து கழகம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடைக் காலங்களில் இந்தியாவில் உள்ள மக்கள் அதிகம் உட்கொள்ளும் பானமாக கரும்புச்சாறு உள்ளது. 100 மில்லி லிட்டர் கரும்புச்சாற்றில் 13-15 கிராம் அளவில் சர்க்கரை உள்ளது. இது அதிகப்படியான சர்க்கரை அளவு என்பதால் மக்கள் கரும்பு ஜூஸ் அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். என்று குறிப்பிடபட்டுள்ளது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடம்பில் இந்த அறிகுறிகள் தெரியுதா? ஜாக்கிரதை..கொலஸ்ட்ரால் ஓவரா இருக்குன்னு அர்த்தம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ