Exercice For Burning Fat and Loosing Weight: விரைவாக எடையை குறைக்க பலர் விரும்புபவர். ஆனால், சாதாரணமாகவே உடல் எடையை குறைப்பது கொஞ்சம் சிக்கலான விஷயமாக மாறி வருகிறது. இதற்கு ஹெல்தியாக டயட் இருப்பதும், அடிக்கடி உடற்பயிற்சி செய்வதும், சரியான தூக்கமும் எடை இழப்பிற்கு தேவையானதாக இருக்கும். ஆனால், ஒரு சில உடற்பயிற்சிகள், வேகமாக கொழுப்பை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

HIIT வர்க் அவுட்:


High-Intensity Interval Training என்று ஆங்கிலத்தில் கூறப்படும் உடற்பயிற்சி, இது. இதை தமிழில் தீவிர உடற்பயிற்சி என கூறுவர். பர்பீஸ், ஜம்பிக் ஜாக்ஸ், ஹை நீஸ் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் இந்த பிரிவின் உடற்பயிற்சியின் கீழ் வரும். இதனால், உடலில் உள்ள கொழுப்பை குறைத்து வேகமாக உடல் எடையை குறைக்கலாம். குறிப்பாக, உடற்பயிற்சிக்கு பிறகு அதிகளவில் உடலில் உள்ள கொழுப்பு குறையும். 


ஸ்குவாட்:


சாமி கும்பிடும் பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும், தோப்புக்கரணம் போடுவர். இதை கொஞ்சம் வித்தியாசமாக செய்தால் அதன் பெயர் ஸ்குவாட்ஸ். இதை செய்தால், உடலில் உள்ள அனைத்து பகுதிகளில் தங்கியிருக்கும் கொழுப்புகளும் கரையும். குறிப்பாக தொப்பை, தொடை ஆகிய பகுதிகளில் இருக்கும் சதை குறையும். 


ஸ்குவாட்ஸ், கொழுப்பை எரிப்பதற்கும் தசையை குறைப்பதற்கும் ஒரு சிறந்த பயிற்சியாகும். இதனால் எலும்புகளும் வலுவடையும். வயது ஆக ஆக, முதுகுத்தண்டு வலுவடையவும் இந்த உடற்பயிற்சி உதவும். 


ஓட்டப்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி:


ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைத்து வயிற்று கொழுப்பை எரிக்கலாம். நீங்கள் ஓட்டப்பயிற்சியை முடித்த பிறகு, அது உங்கள் உடலின் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது, ஹெல்தியான உடற்பயிற்சிகளுள் ஒன்றாகவும் இருக்கும்.  உடல் கட்டமைப்பை பராமரிக்க ஓட்டப்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி உதவும். இது உடலில் நல்ல தசைகளை வளர்க்க உதவி செய்யும். 


மேலும் படிக்க | கொத்து கொத்தா முடி கொட்டுதா? அப்போ இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்க


வலிமைக்கான பயிற்சி:


வலிமையை வளர்க்கும் பயிற்சி, தசைகளை வளர்க்க உதவும். இது, மெட்டபாலிச சத்துக்களை வளர்க்கவும், கொழுப்பை எரிக்கவும் இது உதவும். இவற்றை பெரும்பாலும் உடற்பயிற்சி கூடத்தில் செய்யக்கூடியவையாக இருக்கும். இதற்கு, தகுந்த உபகரணங்களையும் உபயோகிக்க வேண்டும். இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும், திசுக்கள் வலுவாகும். 


கிக் பாக்ஸிங்:


குத்துச்சண்டை மற்றும் கிக் பாக்ஸிங் போன்ற உடற்பயிற்சிகள் வலிமை மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகளை இணைக்கின்றன, இது ஒருவர், கொழுப்பை எரிக்க உதவுகிறது. இந்த வீரியமான பயிற்சிகள் உடலில் உள்ள ஒவ்வொரு தசைகளிலும் வேலை செய்து, கலோரிகளை எரிப்பதை அதிகரித்து, எடை குறைவதை ஊக்குவிக்கிறது.


மேலும் படிக்க | உடல் பருமனால் அவதியா? இந்த உணவுகள் வேண்டவே வேண்டாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ