முதுமையிலும் மூட்டு வலி அண்டாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை!
Tips to Prevent Arthritis & Joint Pain: மூட்டு வலி என்பது மக்கள் குறிப்பாக முதுமை காலத்தில் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை. முழங்கால் மூட்டு வலி சில நேரங்களில் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். பெரும்பாலும் நடக்க கூட கடினமாக இருக்கும்.
Tips to Prevent Arthritis & Joint Pain: மூட்டு வலி என்பது மக்கள் குறிப்பாக முதுமை காலத்தில் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை. வயது ஏற ஏற உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக பலவீனமடைய தொடங்கி, ஒவ்வொரு பிரச்சினையாக ஏற்பட ஆரம்பிக்கும். அதில் முதியவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை மூட்டு வலி. முழங்கால் மூட்டு வலி சில நேரங்களில் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். பெரும்பாலும் நடக்க கூட கடினமாக இருக்கும். மூட்டு வலி என்பது கைகள், இடுப்பு, முழங்கால்கள், முதுகு, என மூட்டு உள்ள எல்லா பகுதிகளிலும் ஏற்படலாம். இந்நிலையில் மூட்டு வலி வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
கால்சியம் நிறைந்த உணவு
எலும்புகள் முக்கியமாக கால்சியத்தால் ஆனவை. எனவே, எலும்புகளுக்கு வலுவூட்ட கால்சியம் நிறைந்த உணவுகளை தினமும் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் (Health Tips). பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களில் குறிப்பிடத்தக்க கால்சியம் அதிகம் உள்ளன.
வைட்டமின் டி
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த, கால்சியம் மட்டுமல்ல, வைட்டமின் டி சத்தும் அவசியம். ஏனெனில், வைட்டமின் டி இருந்தால் தான், கால்சியம் சத்தை உடல் கிரகித்து கொள்ளும். வைட்டமின் டி சத்து சூரிய ஒளியில் அதிக அளவு இருக்கிறது என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி சத்தை அதிகபட்சம் பெற, காலை அல்லது மாலை நேரம் சிறந்தது. இந்த நேரத்தில், உடலின் பல பாகங்களில் வெயில் படும்படி நடப்பது பலன் தரும்.
மேலும் படிக்க | மூளையின் ஆற்றலை மேம்படுத்த... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!
பச்சை காய்கறிகள்
இலை பச்சை காய்கறிகளான, கீரை, முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றில் இரும்பு சத்து, வைட்டமின் கே மற்றும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பங்கு வகிக்கின்றன. இஒவை உடல் பருமனை கட்டுப்படுத்தவும் உதவும். ஏனெனில், ஏனென்றால் உடல் எடை அதிகரிக்கும் போது அந்த எடையை தாங்க முடியாமல் மூட்டுகளில் அழுத்தம் ஏற்படுவதால் வலி அதிகமாக இருக்கும். ஊட்டசத்து குறைபாடும் உடல் எடையும் சேரும்போது, ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கிறது.
புரதம் நிறைந்த உணவு
டோஃபு பன்னீர், கொண்டைக்கடலை மற்றும் ஆளிவிதைகள், முட்டை ஆகிய புரதம் நிறைந்த உணவுகள், மூட்டுக்களை சுற்றியுள்ள தசைகளை வலுவாக்கி மூட்டு வலியை குறைக்கும். தாவர அடிப்படையிலான புரதங்களில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு இது அவசியம். ஏனெனில் இது புதிய எலும்புகளை உருவாக்கும் செல்களான ஆஸ்டியோபிளாஸ்ட்களின் செயல்பாட்டை தூண்டுகிறது.
உடற்பயிற்சி
எலும்பு ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உடல் பயிற்சிகள் முக்கியம். நடைபயிற்சி, படிக்கட்டுகளில் ஏறுதல் போன்றவை எலும்புகளை வலுவாக்கும். மூட்டி வலிக்கு நிவாரணம் அளிக்கும்
எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்க கூடாது
கீல்வாதம் வலி மிகவும் வேதனை கொடுப்பதாக இருக்கும். மூட்டுவலி வலி என்பது நம் அன்றாட பணிகளை சரியாக செய்ய முடியாமல் தடுக்கும். மூட்டுகளில் வீக்கம், வலி போண்ற ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காமல், தகுந்த வகையில் மருத்துவ ஆலோசனை பெற்று கவனம் செலுத்தியினா, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மூலமே மூட்டு வலியை குணப்படுத்தி விடலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! காலை உணவை மிஸ் பண்ணவே கூடாது... காரணங்கள் இதோ..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ