நாம் முதன்முதலாக ஒருவரை பார்க்கும்போது சின்னதாக புன்னகைப்போம், அப்படி நாம் புன்னகைக்கும்போது நமது பற்கள் பளபளவென்று மின்ன வேண்டுமென்று பலருக்கும் ஆசை இருக்கும்.  ஆனால் நாம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் மற்றும் டூத்ப்ரஷ்கள் உண்மையாகவே நம் பற்களை வெண்மையாக்குகின்றனவா என்றால் நிச்சயம் இல்லை.  ஆம், நாம் பயன்படுத்தும் எந்த வகையான டூத்பேஸ்ட்டும் சரி, டூத்ப்ரஷ்களும் சரி நமது பற்களில் படிந்துள்ள கரைகளை மேலோட்டமாக மட்டுமே நீக்குகின்றது.  பற்களை வெண்மையாக்க வேண்டி நாம் செய்யும் சில சிகிச்சைகள் நமது பல் ஈறுகளை சேதப்படுத்துகிறது, நிறம் மாற செய்தல் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.  அப்படி நாம் எவ்வித பாதிப்பிலும் சிக்காமல், வெண்மையான பற்களை பெற மருத்துவர்கள் தற்போது ஹைட்ரொஜெல் தெரபி என்கிற சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினம் பல் துலக்குதல் மற்றும் ஃப்ளோசிங் ஆகியவை கேவிட்டிஸ் உருவாகாமல் தடுக்க நல்ல வழி என்றாலும், இந்த முறைகள் பற்களை வெண்மையாக்குவதில்லை.  அதனால் ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்ட ஜெல் மற்றும் நீல ஒளியை இணைத்து, கறைகளை நீக்கும் ஒரு ரசாயன சிசிகிச்சைகளை எடுக்க முயல்கிறார்கள்.  இந்த கலவை நிறமாற்றத்தை நீக்கினாலும் இது பற்களின் எனாமலை சேதப்படுத்துவக அமைந்திருக்கிறது.  முன்னர் சியோலெய் வாங் மற்றும் லான் லியோ ஆகியோர் அதிகளவு பாதிப்பில்லாத வகையில் பற்களை வெண்மையாக்கும் நோக்கத்தில் டைட்டானியம்-டை-ஆக்சைடு நானோ துகள்களை மாற்றியமைத்தனர்.  இந்த முறைக்கு அதிக அடர்த்தி கொண்ட நீல ஒளி தேவைப்படுவைத்தால் இது தோல் மற்றும் கண்களை சேதப்படுத்துவது கண்டறியப்பட்டது.   எனவே பற்களை வெண்மையாக்க பச்சை ஒளியை பயன்படுத்தி வெண்மைஇயக்கும் செயல்முறையை கண்டுபிடிக்க மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.



மேலும் படிக்க | Weight Loss Diet Plan: எடையை குறைக்க புதிய டயட் சார்ட்


அதன் பின்னர், ஆராய்ச்சியாளர்கள் பிஸ்மத் ஆக்ஸிகுளோரைடு நானோ துகள்கள், காப்பர் ஆக்சைடு நானோ துகள்கள் மற்றும் சோடியம் ஆல்ஜினேட் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து ஒரு அடர்த்தியான கலவையாக உருவாக்கினார்கள்.  அந்த கலவையை ஒரு ஸ்லைடில் உள்ள பற்களின் மேற்பரப்பில் பூசி, கால்சியம் குளோரைடு கரைசலுடன் கலவையை தெளித்து, வலுவாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஹைட்ரஜலை உருவாக்கினர்.  அதனையடுத்து காபி, டீ, புளூபெர்ரி ஜூஸ் மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றால் கறை படிந்த பற்களில் சோதனை செய்தனர்.  ஹைட்ரஜெல்ல் மற்றும் பச்சை விளக்கு சிகிச்சையைத் தொடர்ந்து காலப்போக்கில் பற்கள் பிரகாசமாக ஒளிரத்தொடங்கியது.  மேலும் இந்த சிகிச்சையின் மூலம் பயோஃபிலிம்களில் உள்ள 94 சதவீத பாக்டீரியாக்களும் அளிக்கப்பட்டு இருக்கிறது.


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க கொரியன்ஸ் பின்பற்றும் விநோத பழக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ