இளமையினை திரும்பப்பெற 6 இயற்கை பழச்சாறுகள்!
வயது என்பது வெறும் எண் மட்டும் தான், இளமைக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது பலரது கூற்று. இது உன்மை தானா?
வயது என்பது வெறும் எண் மட்டும் தான், இளமைக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது பலரது கூற்று. இது உன்மை தானா?
நிச்சையம் உன்மை தான் என நிறுபித்துள்ளது ஓர் ஆய்வு. இயற்கை உணவுகளை விட்ட செயற்கை உணவுகளை நாடி சென்றதாலே குறைந்த வயதிலேயே முதியவர் போல் காட்சியளிக்கின்றோம் என இந்த ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.
இதற்கு சான்றாக யோக பயிற்சி பெறுபவரை நாம் பார்க்கலாம். வயது மிகுதியிலும் மிகவும் இளமையாக காட்சியளிக்க கூடிவர்களாக இருப்பார்கள். யோக செய்துவிட்டால் போதுமா? இல்லை அதற்கு ஏற்ற ஆரோக்கிய உணவும் வேண்டும் அல்லவா...
கீழே கொடுக்கப்பட்டுள்ள இறக்கை பானங்களை குடித்தால் போதும், உங்கள் இளமை திரும்பவிடும் என்பதை விட, இருப்பதை தக்க வைத்துக்கொள்ளலாம்.
தக்காளி சாறு: சருமத்திற்கு நன்மை பயக்கும் ஆண்டிஆக்ஸிடென்ட் மற்றும் ஐஸோப்போன் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கும் பழம். சருமத்தினை பலபலப்பாக வைத்திருக்க உதவும்.
சிவப்பு திராட்சை சாறு:சரும பலபலப்பிற்கு உதவும் வகையில் சத்துக்கள் பல கொண்ட பழம். ஆண்டிஆக்ஸிடென்ட்-ன் ஒரு வகையாக ரெஸ்வராட்ரோல் கொண்டுள்ளது.
மாதுளை சாறு: உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைப்பது மற்றும் அல்லாமல், பாக்டீரியாகளுக்கு எதிராகவும் போராடுகிறது. சிறுநீரக கோளாறு போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ள உதவுகிறது.
தர்பூசணி சாறு. அதிகளவு விட்டமின்கள், மினரல்களை கொண்டிருக்கும் பழச்சாறு. சரும பலபலப்பிற்கும், மிருதாவாக்கவும் பயன்படுகிறது
பீட்ரூட் சாறு: பீட்ரூட்டில் அடங்கிருக்கும் இயற்கை நைட்ரேட் ரத்த ஓட்டத்தினை சீறாக்கும். சரும பலபலப்பிற்கும் உதவுகிறது.
கேரட் சாறு: லுட்டொய்லீன் என்னும் இயற்கை சக்தியை தன்னூல் கொண்டிருப்பதால் சரம பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் பரிந்துறைக்கப்படும் சாறு. உடலளவில் மட்டும் அல்லாமல், மனதளவிலும் சக்தி கொடுக்கும் இந்த சாறு சருமத்தினை பலபலவென மாற்ற உதவுகிறது.