தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால், தமனிகளின் சுவர்களில் பிளேக் உருவாகத் தொடங்குகிறது. பிளேக் கொழுப்பு மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது. நமது மோசமான வாழ்க்கை முறை, துரித உணவு மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் பல நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதில் முக்கியமானது இதயத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் ஆகும். அதிலும், இதயத்தினி தமனிகளில் அடைப்பு அல்லது பெருந்தமனி தடிப்பு பிரச்சனை ஏற்பட்டால், அது பல நோய்களை கூடவே அழைத்து வந்துவிடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமனிகளின் சுவர்களில் பிளேக் உருவாகத் தொடங்குகிறது. பிளேக் என்பது, கொழுப்பு மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது. இந்த பிளேக், காலப்போக்கில்  தமனிகளின் உள்ளே படிந்து, இரத்த ஓட்டத்தை குறைத்துவிடுகிறது. இரத்த ஓட்டம் குறைவதால் தமனிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது


அதிக எடை, உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் போன்ற காரணங்களாலும் தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. தமனிகளில் ஏற்படும் அடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம், இரத்த உறைவு, பார்கின்சன் போன்ற பல கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது.


மேலும் படிக்க | இரத்தசோகை ஏற்பட்டால் வெளியும் தெரியும் அறிகுறிகள்! இரும்புச்சத்து குறைந்தா பேராபத்து


உடல்ரீதியான கோளாறுகள் ஒருபுறம் என்றால், நாம் உண்ணும் பல உணவுப் பொருட்களும் தமனிகளில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகள் அதிக தீங்கு விளைவிக்கும். கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை போன்ற பிற உணவுகளும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும். நமது தமனிகளுக்கு ஆபத்தான உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.


ஃபாஸ்ட் ஃபுட்


துரித உணவு சுவை நிறைந்ததாக இருக்கலாம், ஆனால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிரஞ்சு ஃப்ரை, பொரித்த சிக்கன், பீட்சா, ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில் கொழுப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இவற்றை குறைவான அளவில் உட்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்குக்கு பதிலாக சர்க்க்ரை வள்ளிக்கிழங்கு பொரியல் சாப்பிடலாம். இது போன்று, உடலுக்கு தீங்கு செய்யும் உணவுப் பொருட்களுக்கு மாற்றுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.  


சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விலக்கும்


மாவு மற்றும் மாவுப் பொருட்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைத் தவிர்ப்பது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் தமனிகளை குறுக்கிவிடும் அபாயம் அதிகம். இதற்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்ள வேண்டும். இவை மிகவும் ஆரோக்கியமானவை. அதிக நார்ச்சத்து இருப்பதால், அவை தமனிகளில் கொழுப்பு சேர அனுமதிக்காது.


மேலும் படிக்க | எச்சரிக்கை! கல்லீரலை காலி செய்யும் மிக ஆபத்தான ‘சில’ உணவுகள்...!


நிறைவுற்ற கொழுப்பை தவிர்க்கவும்
நிறைவுற்ற கொழுப்புகள் உங்கள் தமனிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். நிறைவுற்ற கொழுப்பு முக்கியமாக விலங்கு கொழுப்புகளை உள்ளடக்கியது. இதனுடன், அதிக கொழுப்பு, அதாவது அதிக கொழுப்புள்ள இறைச்சி, பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள் அதிகமாக உட்கொள்வதும் தமனிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.


நிறைவுற்ற கொழுப்பு ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். அதனால் உணவில் உள்ள கொழுப்பு தமனிகளில் சேரத் தொடங்குகிறது. எனவே, கொழுப்பு நிறைந்த எண்ணெய்களுக்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது குறைந்த கொழுப்புள்ள எண்ணெய் போன்ற சிறந்த மாற்றுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் இனிப்பு 
இனிப்புகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். இனிப்பு என்பது பலகாரங்கள் மட்டுமல்ல, குளிபானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளிலும் உள்ளது. ஆனால் இனிப்புகள் உண்பதில் விருப்பம் இருப்பவர்கள் சர்க்கரை பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரையில் செய்யப்பட்ட இனிப்புகளை சாப்பிடுவது தமனிகளை சேதப்படுத்தும்.


மேலும் படிக்க | வயிறு தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் போக்கும் மணத்தக்காளிக் கீரையின் அற்புதம்


மிட்டாய், குளிர் பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ்கள், குக்கீகள் போன்றவற்றில் நிறைய சர்க்கரை உள்ளது. எனவே அவற்றை குறைவாக உட்கொள்ள வேண்டும். இனிப்பு விரும்புபவர்கள் தின்பண்டங்களுக்கு பதிலாக, அதிக பழங்களை உட்கொள்ளலாம்.


முட்டை உண்பதில் அலர்ட்
முட்டை மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் அவற்றின் அதிகப்படியான நுகர்வு தீங்கு விளைவிக்கும். ஒரு நாளைக்கு ஒரு முட்டையை உட்கொள்வது ஆரோக்கியமானது. இதை விட அதிக முட்டைகளை சாப்பிடுவது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் எச்சரிக்கிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.) 


மேலும் படிக்க | மாரடைப்பு வராமல் தடுக்க... இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ