ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ம் தேதி காசநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி 2021-ம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்சுக் மாண்டவியா வெளியிட்டார். இதன்படி, 2021-ம் ஆண்டில் 19,33,381 பேருக்கு காசநோய் ஏற்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் காசநோய் பாதித்தோரின் எண்ணிக்கை 16,28,161 ஆகும். இதே போன்று கடந்த 2019-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2020-ம் ஆண்டு காசநோயால் உயிரிழந்தோர் விகிதம் 11% அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டில் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லாமல் வெறும் காசநோயால் மட்டும் சுமார் 5.36 லட்சம் பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Corona Vaccination: 12-14 வயது சிறார்களுக்கு மார்ச் 16 முதல் தடுப்பூசி!


காசநோய் விகிதம் அதிகரிப்பதில் வறுமை முக்கியப்பங்கு வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வறுமையினால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் காசநோய் இறப்பு விகிதம் அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு காசநோய் இல்லா இந்தியா 2025 என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில்  காசநோயை கண்டறிவதிலும், அதன் சிகிச்சையிலும் கொரோனா பாதிப்பு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட நிதிச்சுமையினால் பலர் சிகிச்சையை பாதியிலேயே கைவிட்டதோடு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டது.  மேலும் கொரோனாவுக்குப் பிறகு காசநோய் விவரங்கள் பதிவாவதும் குறைந்துள்ளதால், நோயாளிகளைக் கண்காணிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2 கொரோனா அலைகளினால் காசநோய் பரிசோதனை மற்றும் பதிவில் சரிவு ஏற்பட்ட நிலையில் அதனை தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலம் அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



மேலும் படிக்க | Medicine Price: மக்கள் அதிகம் வாங்கும் மருந்துகளின் விலை குறைகிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR