Brain Health: மூளை மந்தமாக இருக்கா... ‘இந்த’ மூலிகை ஒன்றே போதும்!
ஆயுர்வேதத்தில் துளசியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது மூளையின் ஆற்றலை மேம்படுத்துவதோடு, பல்வேறு வகையான நோய்களை நீக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
துளசி செடி இந்து மதத்தில் தெய்வமாக போற்றப்படும் ஒரு செடியாகும். அதே சமயத்தில், அதன் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை அளிக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது. துளசி நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அருமருந்தாக திகழ்கிறது. துளசியை உண்பதால் செரிமானத் திறன் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுகிறது. தலைவலியை போக்கும் துளசியின் பயன்பாடு ஆழ்ந்த உறக்கத்தையும் கொடுக்கும். மூளையின் ஆற்றல் மேம்படவும், நினைவாற்றல் பெருகவும் துளசி மிகவும் உதவுகிறது.
துளசியின் ஆயுர்வேத முக்கியத்துவம்
டாக்டர் அர்ச்சனா சின்ஹா துளசி குறித்து கூறுகையில், துளசியின் லத்தீன் பெயர் Ocimm Sanctum Linn என்றும் ஆங்கிலத்தில் Holy Basil என்றும் அழைக்கப்படுகிறது என்றார். துளசியின் பல இனங்கள் காணப்படுகின்றன, அவற்றில் வெளிர் நிறம் மற்றும் டர் நிறம் ஆகியவை முக்கியமானவை. இவை கிருஷ்ண துளசி, ராமர் துளசி என்றும் அழைக்கப்படுகிறது. டாக்டர் அர்ச்சனாவின் கூற்றுப்படி, துளசி இருமல் மற்றும் வாயு நோய்களை குணப்படுத்துகிறது. இது உடலில் இருக்கும் புழுக்களையும் அழிக்கிறது. காய்ச்சல் இருந்தால், அதன் இலைகளை கொடுக்க காய்ச்சல் மறைந்து விடும்.
துளசிக்கு பல மருத்துவ பயன்கள் (Health Tips) உண்டு என்கிறார் டாக்டர் அர்ச்சனா. இவற்றில், 4 முக்கிய விஷயங்கள் உள்ளன:
1. தினமும் ஐந்து துளசி இலைகளை தண்ணீருடன் விழுங்குவதால் மூளையின் சக்தி அதிகரிக்கிறது. ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவும் துளசியை தினமும் உட்கொண்டால் நினைவாற்றல் மிக சிறப்பாக இருக்கும். மந்தமான மூளையும் சுறுசுறுப்பாகும்.
2. ஒன்று அல்லது இரண்டு கிராம் உலர் மஞ்சரி பொடியை தேனுடன் சேர்த்து நக்கினால் தலை சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.
மேலும் படிக்க | சிறுநீரக பிரச்சனை இருக்கா... ‘இந்த’ உணவுகளில் இருந்து தள்ளியே இருங்க...!
3. கருமிளகு மற்றும் துளசி இலைகளை மாத்திரையாக செய்து பல்லின் அடியில் வைப்பதால் பல் வலி நீங்கும்.
4. சளி, இருமல் இருந்தால் துளசி இலைகள் 50 கிராம் (அதன் இலைகள் உட்பட), 25 கிராம் இஞ்சி, 15 கிராம் மிளகு, 200 கிராம் சர்க்கரை மற்றும் 500 கிராம் தண்ணீர் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி என்றேல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த துளசி வகைகள் அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும். துளசியின் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! மீன் உணவுகளுடன் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ