கொலஸ்ட்ராலை வெண்ணெய் போல் கரைக்கும் சூப்பர் டிரிங்க்... ட்ரை பண்ணி பாருங்க
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் நரம்புகள் சுருங்கும். இதன் காரணமாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.
நமது உணவு பழக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இன்றைய நவீன உலகம் பாஸ்ட்புட்களின் காலம். இதில், எண்ணெய், கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இது பல உடல் நல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், அதிக கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை போன்ற பிரச்சினைகள் அதிகரித்து விட்டன. இந்த நோய்கள் அனைத்தும் உடலில் பல நோய்களுக்கு காரணமாகின்றன.
குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் உடலுக்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் நரம்புகள் சுருங்கும். இதன் காரணமாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து (Health Alert) கணிசமாக அதிகரிக்கிறது. இருப்பினும், வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கலாம். இது தவிர, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சிலவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.
உங்கள் சமையலறையில் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் பல மசாலாப் பொருட்கள் உள்ளன. சில வீட்டு வைத்தியங்களை எடுத்துக்கொள்வதன் மூலமும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட சூப்பர் ட்ரிங்க் தயாரிப்பது எப்படி, அதனை தயாரிக்க தேவையான குறிப்பிட்ட இரண்டு மசாலாப் பொருட்கள் எவை, இதனை எப்படித் தயாரிப்பது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு
ஆயுர்வேதத்தில் மஞ்சள் உடலுக்கு மருந்தாகக் கருதப்படுகிறது. இவை இரண்டு சேர்ம் போது அதன் ஆற்றல் இரட்டிப்பாகிறது. உடலில் அதிகரித்து வரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் மஞ்சள் உதவுகிறது. மஞ்சளுடன் கருமிளகை சேர்த்து உட்கொண்டால், அது இன்னும் அதிக நன்மைகளை அளிக்கிறது. மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது. மஞ்சளில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் உள்ளன, இது கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இவற்றை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் மட்டுமின்றி பல நோய்களும் குணமாகும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை... டீ - காபி அதிக சூடாக குடிப்பீர்களா... புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்
மஞ்சள் மற்றும் கருமிளகை உட்கொள்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது. மஞ்சள் மற்றும் கருமிளகு தண்ணீர் குடித்து வந்தால் நரம்புகளில் உள்ள ரத்தக் கட்டிகள் குறையும். கருப்பு மிளகு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இது தவிர, இந்த இரண்டு பொருட்களும் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். மஞ்சள் மற்றும் கருப்பட்டி தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால் மாரடைப்பு அபாயமும் குறைகிறது.
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு நீர் கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
கொலஸ்ட்ராலைக் குறைக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு நீரை உட்கொள்ளுங்கள். இதைச் செய்ய, நீங்கள் ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு, அரை தேக்கரண்டி சுத்தமான மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கருப்பு மிளகு தூள் சேர்க்கவும். பின்னர் இதனை நன்கு கொதிக்கவைத்து, வடிகட்டவும். இப்போது இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த தண்ணீரை தொடர்ந்து சில நாட்கள் குடித்து வந்தால், உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம். இது உடல் பருமன், சளி, இருமல் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ