ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு நடத்தும் மருத்துவமனையில், வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்கள் கர்ப்ப பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் நடந்த ஒரு சம்பவத்தை அறிந்த பல ட்விட்டர் பயனர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதாவது அந்த மாநிலத்தில் வயிற்று வலி காரணமாக அரசு சார்பில் இயங்கும் மருத்துவமனை சென்ற இருவருக்கு மருத்துவர்கள் கர்ப்ப பரிசோதனை பரிந்துரைத்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கோபால் கஞ்சூ, 22, மற்றும் காமேஷ்வர் கஞ்சூ 26, என அடையாளம் காணப்பட்டுள்ள இவர்கள் இருவருமே மருத்துவரைப் பற்றி மாநிலத்தின் சத்ரா மாவட்ட மருத்துவமனையின் சிவில் சர்ஜனுக்கு புகார் அளித்ததை அடுத்தே இந்த வினோதமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


முன்னதாக இருவரும் வயிற்று வலிக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர், அதைத் தொடர்ந்து பரிசோதனை மருத்துவர் அவர்களின் வலிக்கு மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரைத்துள்ளார்.


இருவரும் மருத்துவமனையின் நோயியல் ஆய்வகத்தை பார்வையிட்டபோதுதான், HIV மற்றும் ஹீமோகுளோபின் போன்ற பிற சோதனைகளுடன், அவர்களுக்கு ஒரு கர்ப்ப பரிசோதனை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஆய்வக உதவியாளர் தெரிவித்துள்ளார். இச்செய்தியினை கேட்டு அதிர்ந்த இருவரும் இச்சம்பவம் தொடர்பாக சிவில் சர்ஜனுக்கு புகார் அளித்துள்ளனர்.


எவ்வாறாயினும், மருத்துவ பயிற்சியாளர், ஆண்களுக்கு கர்ப்ப பரிசோதனையை பரிந்துரைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இது அவரை அவதூறு செய்வதற்கான சதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ள போதிலும், இந்த செய்தி சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மேலும் சமூக ஊடகங்களில் இந்த செயல்பாட்டிற்கு மக்களின் வேடிக்கையான பதில்கள் அதிகளவில் கிடைத்துள்ளது.


முன்னதாக இதேப்போன்று வயிற்று வலிக்காக மருத்துவரை அனுகிய ஜார்கண்ட்-ன் சிங்குபம் பகுதியை சேர்ந்த பெண்மணிக்கு மருத்துவர் ஆணுறையை பரிந்துரை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.