Urinary tract infection: சிறுநீரத் தொற்று பிரச்சனைகளை தீர்க்க எளிய வைத்திய முறைகள்
சிறுநீர் கழிக்கும் போது அதிகப்படியான வலி எரிச்சல், மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் அறிகுறிகள்
சிறுநீர்ப்பாதை தொற்று என்பது சிறுநீரகப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு தொற்றுநோயாகும். இந்நோய் தொற்றானது சிறுநீரக அமைப்பின் கீழ்ப்பகுதியில் ஏற்படில் இதனை ”சிறுநீர்ப்பை தொற்று” எனப்படுகிறது. இந்த தொற்றை வீட்டிலேயே சின்ன சின்ன விஷயங்களின் மூலமாக சரிசெய்து கொள்ள முடியும். எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
UTI என்பது சிறுநீரக (Urinary tract infection) பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் ஒரு நோயாகும். சிறுநீரகம், சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரக குழாய், போன்ற பகுதிகளில் பாக்டீரியாக்கள் நுண்மம் தாக்குவதால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது.
ALSO READ | சிறுநீர் பாதை தொற்று நோயில் இருந்து தப்பிக்க சில வழிகள்...
சிறுநீர் கழிக்கும் போது அதிகப்படியான வலி எரிச்சல், மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் அறிகுறிகள், சிறுநீர் நீர்ப்பை தொற்றின் அறிகுறிகளாகும். இந்த சிறுநீர் நீர்ப்பை தொற்று குணமாக ஒரு எளிய வீட்டு மருத்துவ முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்
1. நாள் முழுவதும் அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தால் பல நோய்களிலிருந்து நமக்குக் குணம் கிடைக்கும். தினமும் அதிக தண்ணீர் குடித்து வந்தாலே பாக்டீரியங்கள் சிறுநீர் வழியே வெளியேறி விடும். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் குறைந்தபட்சம் குடிக்க வேண்டும். அப்படிக் குடித்து வந்தால் சிறுநீர் நீர்ப்பை தொற்று நோய்களிலிருந்து பெரும்பாலானவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
2. ஆரஞ்சு பழம், ப்ரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, கொய்யாப்பழம் போன்ற பல காய்கறி மற்றும் பழங்களில் விட்டமின் சி என்பது அதிகமாகக் காணப்படுகிறது. விட்டமின் சி அதிகம் மேற்கொள்பவர்களின் சிறுநீரகத்தில் அதிகம் வெளியேறும், இதனால் பாக்டீரியாக்கள் உருவாவது குறைந்து சிறுநீர்ப்பை தொற்று வியாதிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்கும்.
ALSO READ | TV ரிமோட் வீட்டு கழிப்பறையை விட 20 சதவீதம் ஆபத்தானது: ஆய்வு!!
3. காபி, கூல் ட்ரிங்ஸ், இனிப்பு வகைகள், சாக்லேட், தக்காளி, மற்றும் மசாலா கலந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. உங்களுடைய பிளாடர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் அதிக எரிச்சலை உண்டு செய்யும். சிறுநீர் கழிக்கும் போதும் உங்களுடைய வலி அதிகமாவதற்கு இது போன்ற உணவுகள் பெரும் பங்கு வகிக்கிறது.
4. ஆல்கஹால் அருந்துவதையும் தவிர்த்து விடவேண்டும். ஆல்கஹால் அருந்தினால் மூளைக்குச் செல்லும் சிக்னல் சிறிது தடைப்படும். அது உடலில் உள்ள தண்ணீர் தன்மையைக் குறையச் செய்யும். இதனால் புண்கள் ஆறுவது தாமதமாயும்.
5. சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது பெரும் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். முடிந்த அளவு அதிகம் தண்ணீர் குடித்து அடிக்கடி சிறுநீர் கழித்து அசுத்தத்தை வெளியிடுவது மிகவும் நல்லது. இது பாக்டீரியாக்கள் உடலில் தாங்காமல் உடனுக்குடன் வெளியேறும்.
ALSO READ | நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது உடலுக்கு நல்லதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR