வலிப்பு நோயை குணப்படுத்துவதற்கு கஞ்சாவை பயன்படுத்திக்கொள்ளும் ஆய்வாளர்களின் பரிந்துரைக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வலிப்பு நோயை குணப்படுத்துவதற்காக கஞ்சாவை பயன்படுத்துவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆய்வில் சாதகமான முடிவுகள் கிடைத்த போதும், கஞ்சாவைவை மருந்தாக பயன்படுத்துவதில் அமெரிக்க சுகாதாரத்துறை தயங்கியது. ஏனென்றால், கஞ்சா உட்கொள்வதால் நோயாளிக்கு மூளை மழுங்கிவிடுமோ என்ற அச்சம் தான் காரணம். குறிப்பாக வலிப்பு நோய் குழந்தைகளையே அதிகம் தாக்குவதால் அவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து சுகாரத்துறை முடிவெடுப்பதில் தயக்கத்துடன் இருந்தது.


இந்நிலையில், வலிப்பு நோயைக் குணப்படுத்த கஞ்சாவை பயன்படுத்திக்கொள்ளும் ஆய்வாளர்களின் பரிந்துரைக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்க மருத்துவத்துறை வரலாற்றில் இது மிகப்பெரிய மைல்ஸ்டோனாக கருதப்படுகிறது. 


உலகின் பெரும்பாலான நாடுகளில் கஞ்சா பயன்பாட்டை தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தும் நபர்கள் போதைத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருந்தாலும், மருத்துவ உபயோகத்திற்காக கஞ்சாவை பயன்படுத்துவது குறித்து பிரிட்டன் அரசு தற்போது பரிசீலித்து வருகிறது. மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை உபயோகிக்க 14 ஐரோப்பிய நாடுகளிலும், இஸ்ரேல், அர்ஜெண்டினா, போர்ட்டோ ரீக்கோ, பனாமா, மெக்ஸிகோ, உருகுவே, ஸாம்பியா மற்றும்  ஸிம்பாப்வே போன்ற நாடுகளிலும் அனுமதி உண்டு. 


கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், உலகிலேயே முதன் முறையாக உருகுவேயில் கஞ்சா தனிநபர் பயன்பாட்டிற்கு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இத்துடன் சில அமெரிக்க நகரங்களிலும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வரிசையில், கனடாவும் அண்மையில்  இணைந்த. இதையடுத்து, வலிப்பு நோயை குணப்படுத்த கஞ்சா பயன்படுத்தப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது!