Virat Kohli Fitness Secrets: விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் பெரும் வரலாற்றை பதிவு செய்த வீரர் ஆவார். சச்சினுக்கு பின் உலகின் தலைசிறந்த இந்திய பேட்டர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். டெஸ்ட், ஓடிஐ, டி20 என அனைத்து ஃபார்மட்களிலும் விராட் கோலி வைத்துள்ள சாதனைகளுக்கு அளவே இல்லை எனலாம். பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் அவர் பெரும் பங்காற்றுவார். அதற்கு முக்கிய காரணம் அவரின் ஃபிட்னஸ்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விராட் கோலி ஒரு கட்டத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். அது அவரின் கிரிக்கெட் விளையாட்டிற்கு பெரும் உதவியை அளித்தது. 35 வயதான விராட் கோலி இன்னும் உலகில் உள்ள பல இளம் வீரர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். இதற்கு தொடர் உடற்பயிற்சியும் ஒரு காரணம் என்றாலும், முக்கியமான விஷயம் உணவுப் பழக்கவழக்கம்தான். 


விராட் கோலி: ஒழுக்கமும் நேர்த்தியும்...


ஒரு ஐபிஎல் தொடரின்போது வேகவைத்த சிக்கன் மற்றும் வேகவைத்த காய்கறிகளை கண்டிப்பாக உட்கொள்வதை விராட் கோலி வழக்கமாக வைத்துள்ளார் என்றும் இது அவரின் ஃபிட்னஸிற்கு முக்கிய காரணம் என்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் ஜதின் சப்ரு என்பவர் ஒரு பாட்காஸ்டில் கோலியின் உணவுப் பழக்கவழக்கம் குறித்து பகிர்ந்துகொண்டார்.


மேலும் படிக்க | இந்த உணவுகளால் இளம் வயதிலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்! ஜாக்கிரதை!


The Ranveer Show எனப்படும் அந்த பாட்காஸ்டில் விராட் கோலி ஒரு ஐபிஎல் தொடரில் எப்படி எவ்வித தடுமாற்றங்களும் இன்றி விராட் கோலி மிகுந்த உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தார் என்பதையும் ஜதின் சப்ரு பகிர்ந்துகொண்டார். ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் விராட் கோலியின் அணுகுமுறை இருக்கும் எனவும் ருசியை விட ஊட்டச்சத்துக்கே அவர் முக்கியத்துவம் அளிப்பார் என்றும் ஜதின் கூறினார். குறிப்பாக, தனது உடலுக்கு தேவையான குறிப்பிட்ட ஊட்டச்சத்திற்கு ஏற்பவே விராட் கோலி உண்பார் எனவும் ஜதின் தெரிவித்தார். 


விராட் ஃபிட்னஸ் தெரிந்துகொள்ள வேண்டியது


"விமானப் பயணத்தில் கூட விராட் கோலி தனி பேக்கில் அவர் சாப்பிடுவதற்கான நட்ஸ், காபி செட், புரோட்டீன் பார் செட் ஆகியவற்றை வைத்திருப்பார். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அதனை தொடர்ந்து உட்கொள்வார்" என்றும் ஜதின் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், இளம் வீரர்கள் மட்டுமின்றி உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு விராட் கோலியின் உணவு மற்றும் அதுசார்ந்த விஷயங்களின் மூலம் இந்த 5 பாடங்களை நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 


- விராட் கோலி ஃபிட் ஆக இருக்க அவரின் ஒழுக்கமான பழக்கவழக்கமே காரணம். ஆண்டு முழுவதும் அவர் தொடர்ந்து பயிற்சியெடுத்துக்கொண்டும், உடல்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துக்கொண்டும் இருக்கிறார். கிரிக்கெட் விளையாடாத காலகட்டத்தில் கூட தொடர்ந்து அதை செய்கிறார் எனலாம்.


- விராட் கோலி தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்பவர். வலிமையை அதிகரிக்கவும், உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், வலிமை பயிற்சி, கார்டியோ பயிற்சி மற்றும் சுறுசுறுப்பு அளிக்கக் கூடிய பயிற்சிகளை அவர் மேற்கொள்வார். இது அவரின் விளையாட்டிற்கு மிக முக்கியமானது. 


- விராட் கோலியின் உணவுப் பழக்கவழக்கம் என்பது அவரது கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. அவரின் உணவு என்பது எனர்ஜியை அதிகரிக்கவும், எனர்ஜியை இழந்துவிட்டால் அதில் இருந்து மீளவும் திட்டமிடப்பட்டதாகும்.


- உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது விராட் கோலியின் செயல்பாட்டிற்கு மற்றொரு அடிப்படை காரணம். அவர் விளையாட்டிற்கு தேவையான அனைத்து சக்தியையும் அவர் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் பெறுகிறார்.


- விராட் கோலியின் உணவின் அளவை விட உணவின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். பழங்கள், காய்கறிகள், மெலிதான புரதங்கள் ஆகியவை அவரின் உணவுப்பழக்கத்தில் கண்டிப்பாக இடம்பெறும். 


(பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். இதற்கு Zee News பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க மோர் மற்றும் தயிர்: இரண்டில் எது சிறந்தது?
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ