இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில்,  கண்பார்வை பலவீனமடைவது  பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டது. மின்னணு சாதனங்களில் அதிக அளவில் நேரம் செலவிடுவதால், கண் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து விட்டன. இளம் வயதிலேயே தடிமனான கண்ணாடிகளை அணியும் நிலை ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் கண் பார்வை பிரச்சனை ஏற்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண் பார்வை கூர்மைக்கும் வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான சத்து. இது கண் பார்வையை கூர்மையாக்குவது மட்டுமின்றி, செல்கள் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அத்தியாவசியம். வைட்டமின் ஏ ஊட்டச்சத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவுகளிலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது (Health Tips). ஃப்ரீ ரேடிக்கல்கள் இதயம் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான் நோய்களை உண்டாக்கும் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் உடலுக்கு வலுவைத்  தருகிறது. 


கண் பார்வையை மேம்படுத்துவதற்கும், கண் பிரச்சனை வராமல் இருப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


தக்காளி


நடுத்தர அளவிலான தக்காளி  மூலம் உடலின் தினசரி வைட்டமின் ஏ தேவையில் 20 சதவீதம் பூர்த்தியாகும் என்கின்றனர் மருத்துவர்கள். தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளதால் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு கண் ஆரோக்கியத்தை பாதுக்கிறது. லைகோபீன்  கண்புரை மற்றும் முதுமை காரணமாக ஏற்படும் மாகுலர் சிதைவு (AMD) அபாயத்தைக் குறைக்கிறது.  தக்காளியில் உள்ள வைட்டமின் சி கண் வீக்கத்தைக் குறைக்கவும், பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.


சர்க்கரை வள்ளிக்கிழங்கு


சர்க்கரை வள்ளிக்கிழங்கு வைட்டமின் ஏ சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இதில் கலோரிகளும் மிக குறைவாக உள்ளது. அதேஎ சமயம்  இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இதனை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்தை முழுமையாக பெறலாம்.


மேலும் படிக்க | சாக்லேட் மட்டுமல்ல... பிஸ்கட்டும் விஷம் தான்... எச்சரிக்கும் நிபுணர்கள்


குடைமிளகாய்


குடமிளகாயில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகளான லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் உள்ளது. லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவை கண் செல்களை தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கின்றன. முதுமையினால் ஏற்படும் கண் பார்வை கோளாறுகளையும் தவிர்க்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி கண்ணின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது


திராட்சை


சிவப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் கண் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். ரெஸ்வெராட்ரோல் பார்வையையும் மேம்படுத்துகிறது. எனவே, திராட்சையை தவறாமல் உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


ஆப்பிள்


ஆப்பிளில் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ, சி மற்றும் பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன விழித்திரை ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் ஏ முக்கியமானது. அதே சமயம் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் வீக்கத்தைக் குறைத்து பார்வையை மேம்படுத்த உதவுகின்றன.


ஸ்ட்ராபெர்ரி


ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் வீக்கத்தைக் குறைக்கின்றன மற்றும் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. மேலும், ஸ்ட்ராபெர்ரி வைட்டமின் சி ஊட்டசத்தின் சிறந்த மூலமாகும். இது கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. வைட்டமின் சி கண் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் பார்வையை பராமரிக்க உதவுகிறது. 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பால் பிடிக்காதா? பரவாயில்லை... கால்சியம் கிடைக்க இந்த உணவுகளையும் சாப்பிடலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ