வைட்டமின் டி பாலியல் செயல்பாடு, டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், குறைந்த விந்தணு உற்பத்தி, தரம் மற்றும் இயக்கம் உள்ள ஆண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கும். இது ஒரு பொதுவான அறிகுறி என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 

 

வைட்டமின் டி விந்தணுக்களின் தரம் மற்றும் கருப்பை தூண்டுதல் இரண்டையும் மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. பல ஆராய்ச்சியாளர்கள் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது விந்தணுவின் தரம் மேம்படவில்லை என்றாலும், விந்தணுவின் தரம் குறைவாக உள்ள ஆண்கள் தந்தையாக மாறுவதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். மேலும், பெண்களுக்கு வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் வழங்குவது, உயர்தர விந்தணுக்களால் கருவுறும் கருமுட்டையின் வாய்ப்புகளை அதிகரித்து, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மறுபுறம், வைட்டமின் டி குறைபாடு, இனப்பெருக்க சிரமங்கள் மற்றும் எதிர்மறையான கர்ப்ப விளைவுகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

 

வைட்டமின் டி பெண்களுக்கு 

 

வைட்டமின் டி பெண்களின் கருவுறுதல் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. போதிய வைட்டமின் டி அளவைக் கொண்ட பெண்கள் குறைந்த அளவு உள்ளவர்களை விட IVF மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம். குறைந்த அளவிலான வைட்டமின் டி கொண்ட கர்ப்பிணிப் பெண்களுடன் ஒப்பிடும்போது அதிக உயிர் பிறப்பு விகிதம் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. போதுமான வைட்டமின் டி இல்லாதது கருவுறுதலை பாதிக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற கர்ப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

 

வைட்டமின் டி ஆண்களுக்கு

 

வைட்டமின் டி அளவுகள் விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையது. அதிக வைட்டமின் டி அளவைக் கொண்ட ஆண்களின் விந்தணுக்களில் அதிக கால்சியம் அளவு உள்ளது. விந்தணுக்களில் கால்சியம் அளவு அதிகரிப்பதால் இயக்கம் செயல்பாடுகளில் அதிகரிப்பு ஏற்படுகிறது. ஆண்களில் வைட்டமின் டி குறைபாடு விந்தணுவின் இயக்கம் மற்றும் மொத்த விந்தணுக்களின் அளவு ஆகியவற்றைக் குறைக்கிறது. இதன் விளைவாக, வைட்டமின் டி குறைபாடு ஆண்களுக்கு அதிக பலனளிக்க உதவுகிறது.

 

வைட்டமின் டி அளவை அதிகரிக்க வழி

 

* சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைக்கும். 

* சால்மன், டுனா மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த கடல் உணவு மற்றும் மீன்களை சாப்பிட வேண்டும்

* சிவப்பு இறைச்சி

* முட்டையின் மஞ்சள் கரு

* ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்ட உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR